15 August 2007

ஹாஸ்டல் வாழ்க்கை

நானும் பெங்களூரூ போய் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கியாச்சி, பின் சென்னைக்குப் போய் உறவினர் வீட்டிலும் சில மாதங்கள் தங்கியாச்சி. இப்பொழுது சென்னையில் ஹாஸ்டலில். இங்கு எனக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. புது இடம், புதிய மனிதர்கள், புதிய உணவு. எல்லாமே எனக்கு புதுசு. என் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்ள வேண்டிய நிலை. என் துணியையும் கூட நானே துவைச்சுக்கிறேன்னா பாத்துக்கோங்களேன். சரி சரி முறைக்காதீங்க!! நான் என்ன பண்ண. வீட்டுல அப்பா இல்லைன்னா அம்மா யாராவது வாஷிங் மிஷின்ல போட்டுக் கொடுத்துடுவாங்க அதான் வேற ஒண்ணும்மில்லை. ;)

ஹாஸ்டலில் ஒரே இயந்திர வாழ்க்கைத்தான். வரங்க, சாப்பிடுறாங்க அப்பறம் தூங்கடுறாங்க. எனக்கு 9 மணிக்குத்தான் ஆபீஸ். அதுவும் மேலேயே. அதனால 8:30 வரை சயனம் தான். 6:30 மணிக்கு எல்லாம் எழுந்து பழக்கமாயிடுச்சா, அதனால தூங்க முடியல. ஆனா வேற வழியில்லை. எந்திருச்சாலும் வேஸ்ட்டு தான். அதனால தூங்கிக்கிட்டே ஒவ்வொருத்தரையும் கவனிக்கிறதே என் காலைப் பணிகளில் ஓன்றாகி விட்டது. சில நேரம் சுவாரிஸ்யமான விஷயங்கள் எல்லாம் நடக்கும். அதையும் இப்பவே எழுதலாம் தான். ஆனா, நேரம் இல்லை. லேட்டா போன சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது. ரொம்ப கம்மியா வேற அனுப்புறாங்களா. அது மட்டும் இல்லாம இன்னக்கி எல்லாருக்கும் லீவு வேற. அதனால வரட்டா.............

2 comments:

Elangovan R said...

Ethula erunthu onu mattum confirm... neer oru bananna somberi enpathu

நிவேதிதா said...

தெரிஞ்சத ஊருக்கு எல்லாம் சொல்லனுமா?? ;)