09 December 2011

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

நம் குழந்தை பருவத்தில் பகிர்ந்து உண்பதற்கு காக்காகையைத் தான் உதாரணமாக காட்டுவார்கள்.

எங்கு உணவைக் கண்டாலும் தான் மட்டும் உண்ணாமல் மற்ற காக்காகளையும் அழைத்து பகிர்ந்து உண்ணும்

அதனால் தான் பகிர்தலுக்கு காகத்தை சொல்வார்கள்.

சிறு வயதிலிருந்தே காகத்திற்கு உணவுக் கொடுக்கும் வழக்கத்தையும் உண்டாக்கினார்கள்

காலம் மாற மாற மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்றால்
மனிதன் வைத்த உணவை உண்ட காகங்களும் மாறிவிட்டன!!

ஆமாம்!

இன்றும் காகங்கள் உணவைக் கண்ட உடன் மற்ற காகங்களை அழைக்கின்றன.
உணவைப் பகிர்ந்து கொள்ள அல்ல

சின்னக் குழந்தைகள் இனிப்புக்களை மற்ற குழந்தைகளிடம் காட்டிவிட்டு சாப்பிடுவார்களே அப்படித் தான் இன்றைய காக்காய்களும்நைநை காட்டிவிட்டு முடிந்த வரை அலகால் கொத்திக் கொண்டு சொல்கின்றன!!

குரல் கேட்டு ஆசையாய் பறந்து வந்த காகங்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!!

இது ஒரு புறமிருக்க,

இன்றய நவின காக்காய்கள் சிறு குழந்தைகளைப் போல அடம் பிடிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன.

ஆமாம்!!

தினமும் அதற்கு சப்பாத்தி, பூரி என்று விதவிதமாக வேண்டுமாம்
சப்பாத்தி வைக்கும் இடத்தில் சாதம் வைத்துப் பாருங்கள்
மறுநாள் காலை நமக்குத் தான் வேலை இருக்கும்.
ஆமாம் சாதம் வைத்த இடத்தில் அப்படியே இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும்

இதுவே சப்பாத்தி. பூரி என்று வைத்துப் பாருங்கள். ஒன்று விடமால் சாப்பிட்டு இடத்தையும் சுத்தப் படித்தியிருக்கும்

சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கும் இதே நிலை தான்!!

சாதம் சாப்பிடும் போது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூட சில நேரங்களில் சிந்திவிடுகிறோம், காக்காய் சிந்துவதை பெரிதாக சொல்கிறாயே என்று கேட்க வேண்டாம்

நான் சிந்துகிறது என்று எழுத வரவில்லை
தீண்டுவதே இல்லை என்று தான் சொல்கிறேன்....

மனிதன் காக்கா பிடிக்கிறான் என்றால்,
காக்கவொ மனிதனைப் படிக்கிறது

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

3 comments:

Subramanian said...

பிற உயிரினங்களின் மீது தாங்கள் செலுத்தும் அன்பு இந்த பதிவில் தெரிகிறது. அருமை. தொடருங்கள்.

குலவுசனப்பிரியன் said...

நல்ல அவதானிப்பு. காக்காய்கள் விலங்கினத்திலேயே மிகவும் அறிவார்ந்தவை என்று கண்டறிந்துள்ளார்கள். அது பற்றி விரிவான ஆவணப்படம் உள்ளது http://video.pbs.org/video/1621910826/

நிவேதிதா said...

இருவருக்கும் மிக்க நன்றி!