Showing posts with label பந்த். Show all posts
Showing posts with label பந்த். Show all posts

02 October 2007

அரசியல் பேசலாம் வாங்க!!

தமிழகத்தில் பந்த்!! அக்டோபர் மாதம் பிறந்த உடனேயே பந்த். நம்மில் பலருக்கு பந்த் நடக்குமா? நடக்காதா? என்று மனதில் ஒரு பெரிய கேள்வி (??) சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் இல்லை. மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை கிடைக்குமே என்ற ஒரு நல்ல எண்ணம் தான்.

இந்த பந்த், பின்னாளில்(!!) உண்ணாவிரதமாகி, பின் குடியரசாட்சி வரும் என்றவுடன், அதுவும் மாறி ....

நானும் இந்தியப் பெண். அதுவும் தமிழ் நாட்டுப் பெண். இங்கே நடக்கும் இது போன்ற விளையாட்டுகளுக்கு நானும் (நான் மட்டும் அல்ல, தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும்) ஒரு காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன என்ற எண்ணம் இருக்கும் வரை இது போன்ற விளையாட்டுகளை நிறுத்த முடியாது. கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கும் அளவில் பாதி கூட ஒரு நல்ல தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம்!!

ஆளும் கட்சியானாலும் சரி, எதிர் கட்சியானாலும் சரி. இருவரும் இரண்டு விசயத்தில் மட்டும் ரொம்பவே ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

1. ஒருவரை விட ஒருவர் அதிகம் சேர்ப்பதில்.
2. மக்களை வைத்து விளையாடுவதில்

இருவருக்கும் திட்டத்தை செயல் படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தை விட தங்கள் பதவி மேல் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆறுபதிலும் (அதற்கு மேலும்) ஆசை யாரை விட்டது. இதுக்கு நம் அய்யாவும், அம்மாவும் ஒரு சிறந்த உதாரணம். போகும் போது நாம் எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. பின் இதற்காக, அப்பாவி மக்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?? மாத வருமானம் வாங்குபவர்களுக்கு இது ஒரு நாள் கிடைத்த சந்தோஷ விடுமுறையாக இருக்கலாம். ஆனால், நாள் கூலி வாங்குபவர்கள் கதி.....

அரசியல்வாதிகளே, மக்களை வைத்து காமெடி, கீமெடி பண்ணலேயே ????