02 October 2007

அரசியல் பேசலாம் வாங்க!!

தமிழகத்தில் பந்த்!! அக்டோபர் மாதம் பிறந்த உடனேயே பந்த். நம்மில் பலருக்கு பந்த் நடக்குமா? நடக்காதா? என்று மனதில் ஒரு பெரிய கேள்வி (??) சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் இல்லை. மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை கிடைக்குமே என்ற ஒரு நல்ல எண்ணம் தான்.

இந்த பந்த், பின்னாளில்(!!) உண்ணாவிரதமாகி, பின் குடியரசாட்சி வரும் என்றவுடன், அதுவும் மாறி ....

நானும் இந்தியப் பெண். அதுவும் தமிழ் நாட்டுப் பெண். இங்கே நடக்கும் இது போன்ற விளையாட்டுகளுக்கு நானும் (நான் மட்டும் அல்ல, தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும்) ஒரு காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன என்ற எண்ணம் இருக்கும் வரை இது போன்ற விளையாட்டுகளை நிறுத்த முடியாது. கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கும் அளவில் பாதி கூட ஒரு நல்ல தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம்!!

ஆளும் கட்சியானாலும் சரி, எதிர் கட்சியானாலும் சரி. இருவரும் இரண்டு விசயத்தில் மட்டும் ரொம்பவே ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

1. ஒருவரை விட ஒருவர் அதிகம் சேர்ப்பதில்.
2. மக்களை வைத்து விளையாடுவதில்

இருவருக்கும் திட்டத்தை செயல் படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தை விட தங்கள் பதவி மேல் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆறுபதிலும் (அதற்கு மேலும்) ஆசை யாரை விட்டது. இதுக்கு நம் அய்யாவும், அம்மாவும் ஒரு சிறந்த உதாரணம். போகும் போது நாம் எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. பின் இதற்காக, அப்பாவி மக்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?? மாத வருமானம் வாங்குபவர்களுக்கு இது ஒரு நாள் கிடைத்த சந்தோஷ விடுமுறையாக இருக்கலாம். ஆனால், நாள் கூலி வாங்குபவர்கள் கதி.....

அரசியல்வாதிகளே, மக்களை வைத்து காமெடி, கீமெடி பண்ணலேயே ????

15 August 2007

ஹாஸ்டல் வாழ்க்கை

நானும் பெங்களூரூ போய் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கியாச்சி, பின் சென்னைக்குப் போய் உறவினர் வீட்டிலும் சில மாதங்கள் தங்கியாச்சி. இப்பொழுது சென்னையில் ஹாஸ்டலில். இங்கு எனக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. புது இடம், புதிய மனிதர்கள், புதிய உணவு. எல்லாமே எனக்கு புதுசு. என் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்ள வேண்டிய நிலை. என் துணியையும் கூட நானே துவைச்சுக்கிறேன்னா பாத்துக்கோங்களேன். சரி சரி முறைக்காதீங்க!! நான் என்ன பண்ண. வீட்டுல அப்பா இல்லைன்னா அம்மா யாராவது வாஷிங் மிஷின்ல போட்டுக் கொடுத்துடுவாங்க அதான் வேற ஒண்ணும்மில்லை. ;)

ஹாஸ்டலில் ஒரே இயந்திர வாழ்க்கைத்தான். வரங்க, சாப்பிடுறாங்க அப்பறம் தூங்கடுறாங்க. எனக்கு 9 மணிக்குத்தான் ஆபீஸ். அதுவும் மேலேயே. அதனால 8:30 வரை சயனம் தான். 6:30 மணிக்கு எல்லாம் எழுந்து பழக்கமாயிடுச்சா, அதனால தூங்க முடியல. ஆனா வேற வழியில்லை. எந்திருச்சாலும் வேஸ்ட்டு தான். அதனால தூங்கிக்கிட்டே ஒவ்வொருத்தரையும் கவனிக்கிறதே என் காலைப் பணிகளில் ஓன்றாகி விட்டது. சில நேரம் சுவாரிஸ்யமான விஷயங்கள் எல்லாம் நடக்கும். அதையும் இப்பவே எழுதலாம் தான். ஆனா, நேரம் இல்லை. லேட்டா போன சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது. ரொம்ப கம்மியா வேற அனுப்புறாங்களா. அது மட்டும் இல்லாம இன்னக்கி எல்லாருக்கும் லீவு வேற. அதனால வரட்டா.............

ஒரு வார்த்தை

சமீபத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் படி ஒரு வாத்ர்தையில் உளள் எத்ழுதுக்கள் சயாரின வசைரியில் அந்மைது இகிருக்றதா எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கடைசி எத்ழுதும் கடைசி எத்ழுதும் சயாரின இடதித்ல் அந்மைதிருந்து மறற்வை கனான்பினான் என்று இந்ருலுதாம் அதை நாம் நம்டைமுய யூத்கலேதாயே தவன்றிறி பத்டிது விட முயுடிம். ஏன்னெறால், மனித மூயாளைனது ஒவ்ருவொ அச்ட்ரமாக படிகாக்மல் ஒவ்ருவொ வாத்ர்தையாக பப்டிபது தான் அற்தகு காணரமாம்!!

உபயம்; மங்கையர் மலர்

21 July 2007

DCIயில் நாங்கள்


நவின் கேக் சாப்பிட விடாம இப்படி போட்டோக்கு போஸ் கொடுக்க சொன்னதாலே வந்த ஏக்கம் என் கண்களில் தெரிகிறதா?

ஒரு எலும்பு, ஒரு எலும்பை தின்னும் காட்சி இதோ!
இது என் விமர்சனம் இல்லை! ஹேட்டல் சர்வர் அடித்த கமெண்ட்!
மாசா மாசம் போய் சாப்பிடுறோம் இல்ல அதான்!! ;)

அதான் அடுத்தவங்க இலையிலே கைய வச்சாச்சி இல்ல, அப்பறம் என்ன
அழுகை!!
SEO People
(SEO People) ராகவன் ரொம்ப யோசிக்காதீங்க! அதான் எல்லா சைட்டையும் ப(3)ண்ட் பண்ணியாச்சி இல்ல. அப்பறம் என்ன? பாருங்க உங்க மானேஜர் அஜய், அடுத்து நீங்க என்ன பண்ணப்போறீங்களேன்னு நினைப்புல ரொம்ப சோகமா கமிராவை பாக்கிறாரு பாருங்க!! இளங்கொவன், என்னாலும் நாம பேசித் தீர்த்துக்கலாம் ஓகேவா??? மொரைக்காதீங்க ப்ளீஸ்!

17 July 2007

என் கைவண்ணம்!








புடிச்சிருக்கான்னு சொல்லுங்களேன்!

14 July 2007

ஏர்டெல் சுப்பர் சிங்கர் ஜுனியர்!


மெகா சீரியலால் தமிழகத்தின் இல்லத்தரசிகளைக் கட்டிப் போட்டு, அதனால் இல்லத்தரசர்களின் கோபத்துக்கு ஆளாகிக் கொண்டு இருக்கும் சின்னத்திரைகளின் மத்தியில் விஜய் டிவி உண்மையில் ஒரு புதிய சாதனைப் புரிந்து இல்லத்தரசி, இல்லத்தரசர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது.

வாழ்த்துகள் விஜய் டிவி மற்றும் ஏர்டெல்!!!

இளங்கன்று பயமறியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்!!

ஒரே நாளில், ஒரே பாடலில் ஒருவர் புகழின் உச்சிக்குப் போவது என்பது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் என்பதை இந்த செல்லக் குழந்தைகள் முறியடித்து நிஜத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

கிருஷ்ண மூர்த்தி - சென்னை தளபதி, குட்டி வித்வான் என்று பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரனாகி தமிழக மக்களின் மொத்த மனதையும் தன் குரலால் கட்டிப் போட்டிருக்கிறான். கடைசி சுற்றில் அவன் பாடிய 'சங்கீத ஜாதி முல்லை.................' உண்மையாகவே சொல்கிறேன் S.P.B. கேட்டிருந்தால் சந்தேஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார். அவ்வளவு அருமை!! குடும்பத்தின் வறுமையையும் பெருட்படுத்தாமல் அவன் பெற்றோர் அவனுக்கு அளித்திருக்கும் இந்த பயிற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

விக்னேஷ் - ஜுனியர் மாஸ்டர், பட்டனத்து பண்டிதன் போன்ற பல பட்டங்களுக்குச் சொந்தக்காரன். இவன் குரல் மட்டும் இல்லாமல் இவனுடைய துணிச்சல், வேடிக்கையாக அவன் செய்யும் அங்க அசைவுகள் எல்லாமே நம் மனதைக் கொள்ளைக் கொள்கின்றன. சூப்பர்ர்ப் விக்னேஷ்!!!

இனிமையான குரல் யாரையும் கட்டிப்போட்டு விடும் என்பதற்கு விக்னேஷின் நண்பன் ஓர் சிறந்த உதாரணம். இரண்டு வருடம் சுய நினைவின்றி கிடந்த போதும் அவன் தாய், தந்தை பெயர் கூட இன்னும் தெரியாத நிலையிலும் அவன் விக்னேஷை மட்டும் நினைவில் வைத்திருப்பதற்கு அவன் இசை மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனிய குரல், இசை - பாறாங்கல் போன்ற மனதையும் உருக்கிவிடும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

சாய்ஷரன் - பைனலுக்கு வரமுடியாவிட்டாலும் தன்னை தேற்கடித்த தன் நண்பனுக்கு (விக்னேஷ்க்கு) வாழ்த்து கூறியது உண்மையிலேயே என்னை நெகிழ வைத்து விட்டது. இத்தனை வயதாகியும் எனக்கு Maturity வரவில்லை என்று என் உயிர் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆனால் இந்த குட்டிப் பயலுக்கு இந்த வயதில் எத்தனை Maturity. Great!!!


வாழ்த்துக்கள் கிருஷ்ண மூர்த்தி, விக்னேஷ் மற்றும் சாய்ஷரன்!!




07 July 2007

Life: Before and After Marriage


Before the marriage:

He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.
She: Do you love me?
He: Of course!
She: Have you ever cheated on me?
He: NO! Why you even asking?
She: Will you kiss me?
He: Yes!
She: Will you hit me?
He: No way! I'm not such kind of person!
She: Can I trust you?
He: Yes.

Now after the marriage you can read it from below to up !!!!

18 February 2007

ரிக்கர்சிவ் புரோகிராம்




Recursive Function !!

A function that calls itself repeatedly, satisfying some condition is
called a Recursive Function.

உதாரணம் இதோ ---
< -----------------------