01 January 2017

365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்!!


என்னது??? 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா?? அப்படி என்றால் இந்த  சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா?? என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா?? நம்பவே முடியவில்லை!!

பி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.

முறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள்.

வீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(!!)

பெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ?, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா? குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள்.  இவர்கள் ஒரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை.  இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன!!!

ஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் .

ஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது.

பி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி.

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, விலைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.

என் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது.

கீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது.

என் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே!!! சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள்!! இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன்.

இவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..


06 July 2016

பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள் - 1


பி3ல்லி  பாடக் கற்றுக் கொண்டது எப்படித் தெரியுமா?

வாட்ஸ் ஆப் குரூப்பில் சின்ன குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் வாழ்த்துக் கூற இணையத்தில் இருந்து காக்டெயில்கள் ஹாப்பி பேர்த்டே பாடுவதை டவுன்லோடு செய்து அனுப்புவதுண்டு. அதைப் பார்த்து நம் பி3ல்லியின் குரலில் நாங்கள் எப்பொழுது கேட்கப் போகிறோம் என்று சிலர் கேட்க ஆரம்பிக்கவும் நாம் ஏன் இந்த விடியோவை வைத்து பி3ல்லிக்கு பாடக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமா? என்று அப்போது தெரியவில்லை.

தினமும் மாலை வீடு வந்தவுடன் அவர்களைக் கொஞ்சி விட்டு பின் விடியோவை ஆன் செய்வேன். முதலில் இருவரும் பாடலைக் கேட்கவில்லை. தங்களைப் போல் ஒன்றைப் பார்த்தவுடன் இருவரும் சந்தோஷத்தில் பறப்பதும், சத்தமாக விசில் அடிப்பதுமாக இருந்தார்கள். ஒரு வாரம் இப்படியே போனது. நானும் விடாமல் தினமும் அதை முதலில் 10 நிமிடம், பின் 15 நிமிடம் என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினேன். முதல் வாரம் கத்திக் கொண்டே இருந்த பி3ல்லி இப்பொழுது பாட்டைக் கவனிக்கத் தொடங்குவதாகப் பட்டது. நான் 15 நிமிடம் தொடர்ந்து பாட வைத்து மொபைலை எடுக்கப் போனால் பி3ல்லிக்கு கோபம் வரும். மொபைலை பிடுங்க வருவான். மொபைலை எடுக்கப் போய் கடி வாங்கிய அனுபவம் என் கணவருக்கு உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த விடியோவை  மில்லி பார்ப்பது பி3ல்லிக்குப் பிடிக்காது. உடனே அவளைத் துரத்திவிட்டுத் தான் மறுவேளைப் பார்ப்பான். மில்லிக்கு விடியோவைப் பார்க்க அவ்வளவு ஆசை. என்னிடம் ஓடி வந்து என் மேல் ஏறி பார்க்க ஆரம்பிப்பாள். பி3ல்லிக்கு கோபம் வரும் என்னை முறைத்துக் கொண்டே பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பான். இப்படியே மூன்று வாரம் போனது பி3ல்லி பாட்டைக் கேட்டானே ஒழிய அதைப் பாடவில்லை. எனக்கும் பொறுமை போய்விடும் போல் இருந்தது. நான் விடியோவை ஆன் செய்தாலே மில்லி கொட்டாவி விட ஆரம்பித்தாள். பின் தலையைச் சொறிந்து கொள்ள ஆரம்பிப்பாள். ஒரே விடியோ தொடர்ந்து நான்கு வாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கே ஒரு வித அலுப்பு வரத் தொடங்கி போடாமல் விட்டால் பி3ல்லி விட வில்லை. மொபைல் மேல் ஏறி நின்று போடச் சொல்லி என்னைப் பார்ப்பான். போட்டால் அவ்வளவு கவனமாகக் கேட்பான். ஆனால் ஒரு தடவைக் கூட பாடவில்லை.

                                         
ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து களைத்துப் படுத்து விட்டேன். எங்கிருந்தோ ஹாப்பி பேர்த்டே பாடுவது போல் கேட்கிறது. கனவு போலும். அடிக்கடி கேட்பதன் பக்கவிளைவு என்று நினைத்தேன். ஆனால் வர வர மிக மிக அருகில் கேட்பது போல் இருக்கவே கண்ணைத் திறந்தால் நம் பி3ல்லி!!

என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு அழகாக என்னைப் பார்த்து பாடிக் கொண்டே இருந்தான். நான் சூப்பர் ர என் செல்லம். என் லட்டு என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன்.

ஹாப்பி பேர்த்டே டு யு வை எப்படி நேரம் பார்த்து பாடுவது என்பது இருவருக்கும் தெரியும். அதை அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்!! இன்னும் வரும்!!

04 July 2016

வசந்தம் வந்ததே!!

இந்த வருடம் பிறந்த முதல் தேதியிலிருந்து, எங்கள் வீட்டிற்க்கு வந்த சந்தோஷங்கள். எங்கள் செல்லங்கள். இவர்கள் காக்டெயில் வகையைச் சேர்ந்த பறவைகள். ஆண் (3 மாதம்) ஒன்று. பெண் (3 1/2 மாதம்) ஒன்று. ஆமாம் மகனும் (மரு)மகளும்!.  இவர்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகக் கூடியவர்கள்.  கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் செய்த லீலைகளைத் தான் இந்த பதிவிலிருந்து பதியப் போகிறேன்.

வீட்டிற்க்கு வந்த முதல் நாள் கூண்டை விட்டே வர மறுத்தார்கள். நாங்களும் இவர்களுக்கு புதிது. இவர்களும் எங்களுக்கு புதிது. இருவருக்குமே பயம். கையில் தூக்கிக் கொள்ள கொள்ளை ஆசை எங்களுக்கு. ஆனால் அனுபவமோ எங்கள் இருவருக்கும் பூஜ்யம்.  நாங்கள் இவர்களை வீட்டிற்க்கு அழைத்து வரும் முன்பே எங்கள் உறவினர்கள் வீட்டிற்க்கு வந்து எங்கள் புதிய குடும்ப அங்கத்தினர்களை வரவேற்றார்கள்!!

வந்த முதல் வாரம், எளிதாக எங்களால் தூக்க முடிந்தது மகனை மட்டுமே. மகளைத் தொடக் கூட முடியவில்லை. கடிக்க வருவது போல் எங்களை பயமுறுத்துவதும், பயந்து பின்னால் செல்வதுமாகவே இருந்தாள். நாங்களும் அவளை பயமுறத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இவள் பயப்படுவதோடு நிற்காமல் இவனை வரச் சொல்லி சைகை வேறு.

ஒரு வாரம் முழுவதும், இருவரும் மிகவும் அமைதியாகவும், கூண்டை விட்டு அவ்வளவு எளிதில் வெளியே வராமலும் இருந்தார்கள்.

மகன் ஒரு வித வித்தியாசமான ஒலியை எழுப்புவான். நமக்கு மூச்சுத் திணறலின் போது வருமே அது போல் இருக்கும். அது போன்ற ஒலி பெண்ணிடம் இருந்து வராது. அவள் கூண்டில் உள்ள கம்பிகளைப் பிடித்து ஏறிவிடுவாள். ஆனால் இவனோ அப்படி செய்ய மாட்டான்.  எங்களுக்கு அதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை. அவனுக்கு உடம்புக்கு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து அவனை அழைத்துக் கொண்டு அந்த கடைக்காரரிடம் சென்றோம். அங்கு ஒரு தடவைக் கூட அந்த சத்தம் போடவேயில்லை. கடைக்காரரோ உங்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம், எனக்குத் தெரிந்து அவனுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

நாம் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் குழந்தையை குணமாக்க நினைப்போமே தவிர அக் குழந்தையை மாற்றவா முயலுவோம். மாற்ற வேண்டாம். ஏதாவது பிரச்சனை இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளத் தான் வந்தோம் என்று சொல்லி விட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.

இவர்களுக்கு பெயர் வைத்ததே ஒரு சுவையான நிகழ்வு தான். எத்தனைப் பெயர்களைத் தேடினோம் இணையத்தில். Rio படத்தில் வரும் பெயர்களை எல்லாம் ஆராய்ந்தோம். ஆனால் எதுவுமே இவர்களுக்கு பொருந்துவதாகத் தோன்றவில்லை எங்களுக்கு. இறுதியில் வாட்ஸ்ஆப் குரூப்பில் இவர்களுக்கு பொருத்தமான பொயரைச் சொல்லச் சொன்னோம். நிறைய பெயர்கள். சின்னப் பெண் சொன்ன பி3ல்லி, மில்லி பெயர் இருவருக்கும் பிடிக்கவே நல்ல நாளாகப் பார்த்து இருவரின் காதிலும் அவர்கள் பெயரை மூன்று முறை ஓதி விட்டோம். ஆம்!! நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே!! பையன் பி3ல்லி!! பெண் மில்லி!!

இரண்டாவது வாரத்தில் மில்லியை கூண்டில் இருந்து வெளியே கொண்டுவர கடைக்காரர் சொன்ன யோசனையின் படி பி3ல்லியை கூட்டிக் கொண்டு மில்லியின் பார்வையில் படும் படி அவனைத் தூக்கி கொஞ்சி, தோலில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் என் கணவர். சில விநாடிகள் தான் மில்லி வெளியே வந்து கத்த ஆரம்பித்தாள். என் கணவரும் அவள் அருகில் சென்றவுடன் அவளும் கையில் ஏறி தோலுக்கு வந்து விட்டாள். கடிக்கவோ, கத்தவோ இல்லை. நான் பி3ல்லியைத் தூக்கவேன். ஆனால் மில்லியை தூக்க பயப்படுவேன். இரண்டாவது வாரம் முடியும் பொழுது எல்லாமே தலைக் கீழாக மாறி விட்டது. இதற்கு நடுவில் பி3ல்லிக் காய்ச்சல் வந்து அவனுக்கு மருந்தை உணவோடு கொடுத்து அப்பப்பா என்னவெல்லாம் இருக்கிறது.

காலையில் எழுந்தவுடன் ஆண் பறவை பாட ஆரம்பிக்கும். பெண் பறவை பாடாது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். கடந்த இரு வாரமும் பயத்தில் அவர்கள் போடும் விசில் சத்ததைத் தவிர பி3ல்லி எந்த பாட்டும் பாடியதில்லை. நான் கூட பி3ல்லியைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியே கேட்கும் பறவைகளின் குரலைக் கேட்டு நீ எப்படா இப்படி பாடுவே என்று கேட்பதுண்டு. என் கணவரோ, ஏன் இப்படி அவனைப் படுத்துறே என்பார்!!

இரண்டு வாரங்களுக்குப் பின் பி3ல்லியிடம் அந்த சத்தம் குறைந்திருந்தது. பின்பு தான் தெரிந்தது அது பயந்தால் வரும் சத்தம் என்று. ஆனால் அது தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. மிகவும் சாதுவான பையன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டோம் நாங்கள். ஆனால் இது வரை வாயேத் திறக்காமல் இருந்த மில்லி வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். திறந்த வாயை மூடவேயில்லை. காலை எழுந்ததும் எஸ்.பி.பி. போல் மூச்சுவிடாமல் பாடுவாள். மிகவும் இனிமையாக இருக்கும். காலையில் மட்டும் சாதகம் செய்ய ஆரம்பித்த மில்லி பின்பு அவளுக்குத் தோன்றும் போது எல்லாம் பாட ஆரம்பித்தாள். சன் மியூஸிக்கில் வரும் பிரேக் பிரி சங் போல. அவளை அடக்க  பி3ல்லி ஒருவனால் தான் முடியும். ஒரே ஒரு சத்தம் போதும் அவளை அடக்க!! சரியான வாயாடி மில்லி!!  ஆண் சிங்கம் பி3ல்லி!!

இதற்கு பிறகு அவர்கள் செய்த லீலைகள் ஏராளம் ஏராளம்!!

முன்பெல்லாம் அலுவலகம் விட்டு வீட்டிற்க்கு வரவே கடுப்பாய் இருக்கும். வீட்டில் ஒரு வித தனிமையும், வெறுமையும் இருப்பது போல் தோன்றும். ஆனால் இப்பொழுது அலுவலகம் எப்பொழுது முடியும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டோம். பி3ல்லி, மில்லி உடன் விளையாட.

கூண்டை விட்டு வெளியே வரத் தயங்கியவர்கள், இப்பொழுது என்னடாவென்றால் ஹாலுக்கும், ரூமுக்கு, பால்கனிக்கு என்று உலவ ஆரம்பித்து விட்டார்கள். காலையில் எழு மணிவரைத் தான் எனக்கு நேரம். அதற்குப்பின்  கூண்டைத் திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கத்தி கத்தி விசில் அடிப்பதும், கூண்டுக் கம்பிகளைத் தட்டுவதுமாக ஆரம்பிப்பார்கள். கூண்டைத் திறக்க அருகில் செல்லும் போதே இருவரும் தயாராக இருப்பார்கள். பாதி திறக்கும் போதே வெளயே வந்து விடவேண்டும். அவ்வளவு அவசரம்.

காலையில் பால்கனியிலிருந்து வெளியே போகும் பறவைகளுடன் உரையாடுவதும், நாங்கள் உண்ண அமர்ந்ததும் எங்கு இருந்தாலும் அவசர அவசரமாக வந்து எங்களுடன் உண்பதும். நாங்கள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்துவிட்டால் எங்களைக் கிளம்ப விடாமல் எங்கள் மேல் ஏறுவதும், இறக்கி விட்டாலும், மறுபடியும் ஏறி ஏறி அடம் பிடிப்பதும், மாலை நான் வரும் நேரம் எங்கு இருந்தாலும் கூண்டிற்க்கு மேல் வந்து நான் வரும் வரை பாடிக் கொண்டே எனக்காக காத்திருப்பதும், வந்த உடன் என் தோலில் ஏறிக் கொண்டு என் காதைக் கடிப்பது, பாடுவது என்று ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் செய்வார்கள். சனி, ஞாயிறுகளில் எங்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டார்கள். நாங்கள் உறங்கும் போது எங்கள் மேலே ஏறி அவர்களும் உறங்குவார்கள். அவர்கள் ஏழுந்து விட்டால் எங்களை எழுப்ப எங்கள் காது அருகி்ல் வந்து கத்தி எழுப்புவார்கள். அவர்களுக்கு முழிப்பு வந்து விட்டால் நாங்களும் எழுந்தே ஆக வேண்டும். ஆனால் எங்களுக்கு முழிப்பு வந்து அவர்களை எழுப்பினால் அவ்வளவு தான் இருவருக்கும் அவ்வளவு கோபம் வரும். அவர்கள் உறங்கி எழும் வரை நாங்களும் படுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

இவர்கள் சோம்பல் முறிக்கும் அழகும், கொட்டாவி விடும் அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் சந்தர்ப்பம் பார்த்து செய்யும் போது நமக்கு எப்படி இருக்கும் அதை மற்ற பதிவுகளில் சொல்கிறேன்.

இணையத்தில் இவர்களைப் போன்றவர்கள் ஹாப்பி பார்த்டே மற்றும் பல விதமான பாடல்களைப் பாடுவதைக் கேட்டு இவர்களுக்கும் அதை பயிற்றுவிக்க நினைத்தோம். பி3ல்லி சில பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டினானே தவிர பாடுவதில் ஆர்வம் இல்லை.  ஆனால் மில்லியோ பாடல்களைக் கேட்பதோடு இல்லாமல் அதைப் பாடவும் ஆரம்பித்தாள். அவளுடைய அபார முயற்சி விஸ்வரூப வெற்றியும் அடைந்தது.

இவர்கள் எப்படி கற்றார்கள். கற்கும் போது செய்யும் லீலைகளை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

என்ன பதிவு குழப்புகிறதா? மில்லி பெண் என்று சொன்னாயே பின் எப்படி பாடுகிறாள்? என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட! நம் மி்ல்லி அந்த அரிய வகைப் பெண் போல என்று பெருமைக் கொண்டோம். ஆனால் பி3ல்லி பாடவே இல்லை.  சரி சின்னப் பையன் தானே வளருட்டும். இருவரும் சேர்ந்து நமக்கு கச்சேரியே செய்து காண்பிப்பார்கள் என்று நினைத்தோம். வீட்டிற்க்கு வந்து விட்டாலே பி3ல்லி, மில்லி என்று கொஞ்சவே நேரம் போதவில்லை எங்களுக்கு.

இந்த குழப்பத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் அந்தக் கடைக்காரர். ஆம் உங்கள் யூகம் சரிதான். மில்லியை ஆண் என்றும், பி3ல்லியைப் பெண் என்றும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். என்னால் தான் தாங்கவே முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. ஒரு வேளை இருவருமே ஆணாக இருந்தால் என்ன ஆகி இருக்கும். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் மில்லியை அவள் என்றும், பி3ல்லியை அவன் என்றும் சொல்லிவிட்டு இப்படி மாற்றினால் எப்படி. இரண்டு தினம் புலம்பவும். டேய் பையா! என்று மில்லியையும், யேய் பெண்ணே! என்று பி3ல்லியையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

கடைசியாக பெயரைக் கூட மாற்றி நல்ல நாளாக மறுபடியும் பார்த்து அவர்கள் காதில் ஓதிவிட்டோம். ஆமாம் இப்பொழுது பி3ல்லியை மில்லி என்றும், மில்லியை பி3ல்லி என்றும் அழைக்கிறோம். ரொம்ப கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய. பெண்ணுக்கு பெண் பெயரும், ஆணுக்கு ஆண் பெயரும் வைப்பது தானே நியாயம். பி3ல்லி மில்லி என்றால் குரல் கொடுப்பார்கள். ஆனால் எந்த பெயர் யாருக்கு என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே!!



பி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்!! இன்னும் வரும்!!

09 December 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள் - 2 !!

இது வரை ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவு பதிந்தது இல்லை. இது தான் முதல் முறை. இனி இதுப் போன்ற பதிவுகள் பதியாமல் இருப்பேனா என்று பார்ப்போம்.

வெள்ளம் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தந்திருந்தாலும், பலருடைய வாழ்க்கையை, வாழ்வாதாரத்தையே நிலைக்குலைய வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திங்கள் இரவு தொடங்கிய மழை, செவ்வாய் காலை 9 மணியளிவில் ஓய்வு எடுக்கத் தொடங்கியது. சரி ஆபிஸ் கிளம்பி விடலாம் என்று தயாராகி வண்டியை எடுக்கும் போது மணி 10. அப்பொழுது தொடங்கிய மழை தான் ஓய்வே இல்லாமல் வெளுத்து வாங்கத் தொடங்கியது. 10 மணிக்கே மின்சாரமும் போய் விட்டது.

என்னை ஆபிஸ் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவர் மட்டும் வண்டியில் சென்றுவிட்டார். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிகம் ஏறிக் கொண்டே இருந்தது. மழைக்கு ஓய்வுத் தேவைப்படவில்லை போலும். சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டே இருந்தது. எனக்கோ சிறிது கவலையோடு பயமும் வர ஆரம்பித்தது. என் கணவருக்கு போன் போட்டால் தண்ணீர் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாரே தவிர கிளம்பும் பேச்சே இல்லை. மதியம் ஒன்றறை மணியிருக்கும் என் கணவரிடம் இருந்து போன். அப்பாடா! மனிதர் ஒரு வழியாகக் கிளம்பி விட்டார் போலும் என்று சந்தோஷத்தோடு போன் எடுத்தால் என் கணவரோ, என்ன சாப்பிட்டாச்சா? நான் இப்போ தான் போறேன் என்று மிகச் சதாரணமாகக் செல்கிறார்.

இப்பொழுது மணி 3.30. என்னால் பொறுக்க முடியவில்லை. இரண்டாம் படிவரை வந்து விட்ட தண்ணீரையும், சைக்கிளின் கைப் பிடி மட்டுமே தெரிந்தப் படி வந்த இருவரையும் படம் பிடித்து என் கணவருக்கு அனுப்பி விட்டு போன் போட்டு கிளம்பச் சென்னால் மெபைல் சார்ஜ் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்று பதில் வருகிறது.

மணி இப்பொழுது 4. 2 வது படியைத் தொட்டு விட்டது தண்ணீர். இரண்டு தெரு நாய் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தது. ஒன்று மேலே படியில் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது.  மற்றொன்றொ இங்கும் அங்கும் கத்திக் கொண்டே திரிந்துக் கொண்டுருந்தது. கட்டிலிலோ, படியிலோ ஏறச் சொன்னாலோ, அதற்கு உதவ முயன்றாலோ நாம் அதைத் துரத்துகிறோம் என்று நினைத்து கத்தி்க் கொண்டு கடிக்க வருகிறது. அதற்கு அவ்வளவு பயம். சரி நாம் அங்கே இருந்தால் அது படியில் ஏறாது என்ற முடிவுடன் நாங்கள் கலைந்து சென்று விட்டோம்.

மணி 5 என் கணவர் கிளம்பி இருந்தார். வழியில் இருக்கும் ஒரு ஏரியும் ரோட்டும் ஓரே மாதிரி இருந்ததாகவும், என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார். எனக்கும் வந்தால் வெளியேச் போக முடியாது என்பதால் அவசியமானவற்றை வாங்கச் சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒரு ஆள் வருகிறார் அவருக்கு இடுப்புக்கு மேலேத் தண்ணீர். இறுதியில் என் கணவர் வெற்றியுடன் பைக்கை சுமார் 1 கீ.மீ. தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். இரண்டாவது நாயும் ஒரு வழியாக படியில் ஏறி இருந்தது. ஆனால் யார் வந்தாலும் பயத்தில் கத்திக் கொண்டே இருந்தது.

சாதுவான நாய்க்கு ஒரு அட்டை பெட்டிக் கொடுத்து அதிலேயே இரவு உணவையும் வைத்து விட்டோம். அந்த பயந்த நாய்க்கோ எதைக் கொடுத்தாலும் அதுக் கத்தவே ஒரு மிதியடியை அதன் அருகில் வைத்து விட்டு உணவை அது பார்க்கும் இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டோம்.

என் தங்கை தண்ணீர் மாடியில் இருந்து வருமா? பால்கனியில் இருந்து வருமா? அங்கிருந்து வருமா? இங்கிருந்து வருமா? என்று பல கேள்விகள் போனில் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

இரவும் வந்து விட்டது மின்சாரமும் இல்லை. தண்ணீரும் ஏறிக்கொண்டே இருந்தது. மழையும் நிற்கவில்லை. இந்த முறை ஏரியைத் திறந்து விட்டால் கட்டாயம் முதல் மாடிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூற ஆரம்பித்தார்கள். முதல் மாடியில் போன வெள்ளத்திற்கு ஊருக்கு போனவர்கள் இன்னும் திரும்பவில்லை. நாங்கள் மட்டுமே. எங்கள் இருவருக்கும் பயம் இலோசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து நீரின் அளவைப் பார்க்க ஆரம்பித்தோம். இப்பொழுது தண்ணீர் 4ம் படியில்.. எங்கள் வீட்டிற்கு மேலே பொதுப் பணித் துறையில் வேலைப் பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தண்ணீரை நம்மால் எப்பொழுதுமே கணிக்க முடியாது. வேகம் அதிகம். அணைகளையே உடைத்துக் கொண்டு வருகிறது. அணைகள் எத்தனை அடுக்குகளுடன் எவ்வளவு பலமாக கட்டியிருப்பார்கள். அதையே உடைக்கும் என்றால் நம் வீடு எல்லாம் எம் மாத்திரம். என்று கூறி பயமுறுத்திக் கொண்டேயிருந்தார். ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து விடிந்ததா என்று நான் கேட்கவும், நீரின் அளவைப் பார்த்தப் படியும் ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் மிகமிக மெதுவாய்த் தான் போய்க் கொண்டிருந்தது.

மற்ற நாட்களில் நேரம் இல்லை என்று எப்பொழுதும் சொல்லும் நமக்கு இன்று நேரத்தை எப்படித் தள்ளுவதே என்று தெரியவில்லை. தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா? வரதா? என்ற பயத்தில் நேரத்தைத் தள்ளுவதே கஷ்டமாக இருந்தது. தண்ணீர் 5வது படிக்கு வந்திருந்தது. தூக்கம் கண்களை சுழற்றுகிறது. பயம் மூளையை விளிக்கச் சொல்கிறது. என்ன தான் செய்ய? பொருட்களை எடுத்து வைத்து விடலாம் என்றால் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் என் கணவர்.

இந்த நாய்கள் வேறு ஒவ்வொரு படியாக மேலே வரவதும். சில நேரங்களில் பயங்கரமாக ஊளையிட்டு அழவும் செய்தது. என் அம்மாவோ! நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வெள்ளம், பூகம்பம் வருவது எல்லாம் முன் கூட்டியே தெரிந்து விடும் என்று அவர் பங்குக்கு பயமுறுத்திக் கொண்டிருந்தார். நானும் அதைப் படித்திருக்கிறேன். தண்ணீர் வருவது, அதனால் தான் நாம் அழிய வேண்டும் என்ற விதியிருந்தால் என்ன செய்வது. விதிப் போல் நடக்கட்டும். பயத்தில் ஹாட் அட்டாக் வந்து சாவதை விட நின்று பார்த்துவிடுவோம் என்னதான் நடக்கிறதென்று. இப்படி பல எண்ண அலைகள் மனதில்.

இப்படியே எங்களுக்கேத் தெரியாமல் சிறிது கண் அசந்து விட்டோம். தீடீரென்று பயங்கர சத்தம். டம் டம் என்று ஏதோ ஒன்று சன்னலை இடிக்கிறது. என் கணவர் என்னை அவசர அவசரமாக எழுப்புகிறார். எனக்கு எங்கோ மிதப்பது போல் ஒரு உணர்வு. எழவே முடியவில்லை. ஒரே இருட்டு. ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கையையும் காணவில்லை. தரை முழுவதும் தண்ணீர். தட்டுத் தடுமாறி படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி கதவைத் திறந்தது தான் தாமதம் அறவியே வீட்டிற்க்குள் வந்து விட்டது. ஒரே ஒரு நொடிக் கூட இருக்காது. நான் கத்த ஆரம்பித்து விட்டேன். திடீரென்று என் கணவர் என் கைகளைப் பிடித்து உலுக்கவும் நான் எழவும் சரியாக இருந்தது. அத்தனையும் கனவு.

என் கணவை என் கணவரிடம் கூற அவர் விழுந்து விழுந்து சிரிக்க, வேறு வழியில்லாமல் நானும் சேர்ந்து சிரிக்க வேண்டியதாயிற்று. மறுபடியும் தண்ணீரின் வருகையைப் பார்க்கச் சென்று விட்டோம். இப்பொழுது தண்ணீர் 5ம் படியில் இருந்து 6ம் படிக்கு ஏற விடா முயற்சி செய்து கொண்டிருந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஆயிற்றே. சரி பார்க்கலாம் . இன்னும் 14 படிகள் இருக்கிறது வீட்டிற்க்குள் வர. எங்கள் கணக்கின் படி 1 படி ஏற அதற்கு குறைந்த பட்சம் 1ல் இருந்து 1 1\2 மணி நேரம் ஆகிறது. மணியோ இப்பொழுது 2. விடியும் வரை நமக்கு நேரம் இருக்கிறது. தூங்கிவிட்டு பிரஷ்ஷாக யோசிக்கலாம் என்று உறங்கச் சென்று விட்டோம்.

விடிந்தே விட்டது ஒரு வழியாக. வேகமாகப் போய் படியைப் பார்த்தால் 6 வது படியைத் தெட்டபடியே நின்று கொண்டிருந்தது. நாங்களும் அடச்சே நல்லதொரு வாய்ப்பு போய்விட்டதே என்ற கவலையில் (என் பதிவை இறைவன் படித்து விட்டு எங்கள் கவலையை அடுத்த வெள்ளத்தில் தீர்த்து விடுவாரோ! ஐய்ஐய்யோ கடவுளே சும்மா ஒரு விளம்பரத்திற்கு. எங்களுக்கு கொளுப்பு மிக அதிகம் ஆகிவிட்டது. அதற்கு காரணமும் கடவுள் தான். பின்னே மழை வருவதால் தானே பஜ்ஜி போட வேண்டியுள்ளது.(!!??))

காணவில்லை, காணவில்லை. பால்கனியைத் திறந்தால் எதிரே இருந்த இடத்தின் மதில் சுவரைக் காணவில்லை. தண்ணீரோ கழுத்து வரை. எங்கு நோக்கினும் தண்ணீர். இந்த முறையும் வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்ததால் எந்தக் கவலையும் பிரச்சனையும் இருக்கவில்லை. மேலே தெட்டியிலும் முழுவதும் நிரப்பி வைத்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை.

இந்த முறை யாருமே எதிர்பார்காத வண்ணம் தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டு வெளி உலகேத் தொடர்பே முற்றிலும் அறுந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. எப்பொழுது நிற்கும். ரமணன் என்ன சென்னார். எதுவும் தெரியவில்லை. அந்த நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து வியாபாரம் செய்ய வந்த நீந்தத் தெரிந்த(!) சில வியாபாரிகள் சொல்வதே எங்களுக்கு அன்றைய செய்தியாக இருந்தது.

வேடிக்கைப் பார்பதிலும் சிக்கனல் கிடைக்கிறதா என்று பார்ப்பதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. இந்த முறை லாரி வர வாய்ப்பில்லை என்பதால் படகு வர ஆரம்பித்தது.  பக்கத்து தெருவில் இருந்த மக்கள் பால்கனியில் இருந்தும் மெட்டை மாடியில் இருந்தும் படகை அழைக்கும் பொருட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தனர். அங்கே தான் எங்களை விட தண்ணீர் அதிகம். இரண்டு முறை வந்து அழைத்துச் சென்று அதன் சேவையை வேறுப்பக்கம் தொடரச் சென்று விட்டது. இதற்கு நடுவில் பொதுப் பணித்துறையும் கிளம்பிவிட்டார்.

நாங்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே. மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. நாய்க்கு மூன்று வேளையும் உணவுக் கொடுத்து, நாங்களும் உண்டு புதன் கிழமையை முடித்துக் கொண்டோம்.

வியாழன் காலைக் மழை விட்டிருந்தது. கதவைத் திறந்தால் குமட்டுகிறது. எல்லாம் நம் நண்பர்களின் வேலைத் தான். மூன்று வேளை இன்புட் கொடுத்ததால் அதுவும் இரண்டாம் மாடியில் ஒரு வீட்டின் முன் அவுட்புட் செய்திருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு மாடிக்கு போய் சிக்கனல் கிடைக்காததால் தண்ணீர் சூழ்ந்து தீவுகளைப் படம் பிடிக்க ஆரம்பிக்கவும் ஹெலிகாப்டரில் உணவுப் பெட்டலங்களைப் போட வரவும் சரியாக இருந்தது. அனைவரும் மாடிக்கு வந்து கை அசைப்பதும், உதவி உதவி என்று கத்துவதுமாக இருந்தார்கள். மிகவும் பாதிக்கப் பட்டு வெளியே வரவே முடியாத பகுதிகளுக்கும், மேல் தளம் இல்லாத வீடுகளுக்குமே உணவு பெட்டலங்கள் வழங்கப் பட்டது. எங்கள் தெருவில் தண்ணீர் வடியத் தொடங்கியிருந்ததாலும், அவ்வளவு பெரிய ஆபத்தில் நாங்கள் இல்லை என்பதாலும் எங்கள் பக்கம் சுற்றி சுற்றி வந்ததே தவிர உணவுப் பொட்டலம் எதுவும் போடவில்லை. நாங்களும் படம் பிடிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் வேலை செய்யத் தொடங்கியது. அதன் மூலம் செய்திகளை ஊருக்கு அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற செய்திகளையும் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் சிக்னல் மொட்டை மாடியில் ஒரு இடத்தில் மட்டுமே கிடைத்தது. சிக்கனல் வருகிறதா என்று பார்த்துப் பார்த்தே பாட்ரியை வீணாக்கி விட்டோம். நிவாரணம் வருகிறது, ராணுவம் வருகிறது, ஹெல்ப் லைன் என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். இந்த வசதிகளின் மூலம் தான் நிறைய பேருக்கு உதவ முடிந்திருக்கிறது. நல்ல விஷயம் மழையால் உருவாகியிருக்கிறது.

ஆண்கள் வெளியே போகாமல் வீட்டில் இருப்பது என்பது மிகவும் அதிசயம். இரண்டு நாட்கள் பொறுத்தாயிற்று. வெளி உலகத் தொடர்பும் இல்லை. போகிறவர்கள, வருகிறவர்கள் எல்லாம் வேளிச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரனை எல்லாம் அடைக்கப் பட்டு விட்டதாகவும் அங்கு சிக்கியவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் கூறத்தொடங்கியிருந்தனர். இதனால் பொறுக்கமுடியாத என் கணவரும் மேல் வீட்டுக்காரரும் தண்ணீரில் இறங்கி விட்டனர். வெளியே போய் நிலவரத்தை தெரிந்து கொண்டு அத்தியாயப் பொருட்களைக் கொண்டு வருவதாகச் சென்று விட்டார்கள். போகும் வழியில் அண்டைவீட்டாரிடம் ஏதாவது தேவையா என்று கேட்டுக் கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்து அனைத்தையும் வாங்கி அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து சேர்ந்தார்கள்.

பொருட்களின் விலையோ தறுமாறாக ஏறி இருந்தது. இதில் கொடுமை என்வென்றால் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பணம் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த காலத்தில் அதுவும் சென்னையில் எத்தனைப் பேர் கையில் பணம் வைத்திருப்பார்கள். ஏடியம் வேலை செய்யவில்லை. என்ன கொடுமை சார் இது.

மதியம் எல்லோரும் சேர்ந்து சமைத்து எங்கள் வீட்டில் அமர்ந்து உணவு உண்டு பழகும் வாய்ப்பை இந்த மழை தான் உண்டாக்கியது. மதியத்திற்கு பின் தன்னார்வத் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்களிடம்
பக்கத்துத் தெருவில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று வழி நடத்திக்கொண்டிருந்தோம்.

மறுநாள் மழையில்லாமல் நீர் குறைந்தால் வேளச்சேரி போய் எங்கள் உறவினர்களைப் பார்த்து வர முடிவு செய்தோம். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அனைவரும் கவலையுடன் இருந்தனர். அவர்கள் வீட்டிற்க்குள் கட்டாயம் தண்ணீர் வரும் என்று தெரியும். இந்த முறை எங்கள் இருசக்கர வாகனமே மூழ்கியதால் அவர்கள் நிலை கட்டாயம் மோசமாக வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே இந்த முடிவு.

இன்னொரு குடும்பமும் புறப்பட்டு விட்டது வெள்ளி அன்று. மீண்டும் போன முறைப் போன்றே இரு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. இருப்பவர்களே எல்லா வேலையும்(சுத்தம் செய்வது, தண்ணீர் ஏற்பாடு செய்வது) செய்ய வேண்டும். இது தான் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருக்கும் பெரிய கொடுமை. யோசிக்கவே மாட்டார்கள் மக்கள்!!

சனி அன்று புறப்பட்டோம். வெளி உலகம் நான்கு நாட்களுக்குப் பின். ரோட்டில் வாகனங்களை மட்டுமே பார்த்த நமக்கு அங்கங்கே கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வீடு வாசலை இழந்து நிற்கும் மக்கள், அவர்களுக்கு உணவுப் பொருட்களும், அத்தியாயப் பொருட்களை வழங்குக் கொண்டிருந்தனர். மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ சேவைகளும் நடந்துக் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் தண்ணீர் வடிந்திருந்தாலும், உள்ளே தெருக்களில் எல்லாம் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது. அங்கங்கே குவித்து வைக்கப் பட்டிருந்த ராணுவ வீரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் எங்களுக்கு அப்பொழுது தான் உண்மையான நிலவரம் தெரிய ஆரம்பித்தது.

எத்தனை மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல் கையோந்தி நிற்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை. உண்மையிலேயே நாங்கள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இந்த நிலையிலும் வகை வகையாக சமைத்து உண்டு, இருள் போக்க மொழுகுவர்த்தி, அகல் விளக்கு, 7மணிக்கே உறக்கம் என்று இராஜ வாழ்க்கைத் தான் வாழ்ந்திருக்கிறோம்.

இந்த வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்வதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலருக்கேனும் உதவ முயன்று கொண்டிருக்கிறோம்.

தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா வரதா என்ற பயத்தையே என்னால் தாங்க முடியவில்லை. இதில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் பயத்தையும், நிலையையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசு வழங்கும் நிவாரணங்கள். ஆவணங்களைப் பெற இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தளர்த்திக் கொண்டால் ஒழிய மக்களுக்கு அவைகள் கிடைப்பதும் சந்தேகமே!

24 November 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள்!!

வார நாட்களில் மூன்று நாட்கள் எந்த வித அலுவலகத் தொல்லையின்றி கிடைப்பது என்பது நம்மில் பலருக்கு ஒரு வரமாகவே இருக்கும். சென்னையில் கொட்டித்தீர்த்த இந்த மழையால் அந்த மிக அரிய வரம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த மழையால் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மிக அருமை.

வீட்டிற்குள் தண்ணீர் வராமல், அடிபடைத் தேவைகளான பலசரக்கு சமானங்கள், காய்கறிகள், பால், குடிக்கத் தண்ணீர் அனைத்தும் இருந்தால் கட்டாயம் இந்த மழையை இரசிக்க முடியும்.

எங்கள் வீடு முதல் மாடி என்பதாலேயே வீட்டிற்குள் மழைத் தண்ணீரால் வரமுடியவில்லை.  மழை ஆரம்பித்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். மின்சாரம் இல்லாமல் போனாலே வெளியுலகத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சம் காணமல் போய் விடுகிறது. மழை நின்றாலேயன்றி மின்சாரம் வரப் போவதில்லை. எப்படித்தான் பொழுது போகப் போகிறதோ என்று பயந்த எங்களுக்கு பொழுது எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.


அடுக்குமாடி வீடு என்பதால் தண்ணீர் எந்த நேரத்திலும் தீரும் வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தண்ணீரை சேமித்துக் கொண்டோம். மழை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர குறையும் வழி இல்லை. இந்த மழை விடாது இரண்டு மூன்று நாட்கள் தொடரும், அணைகள், ஏரிகள் நிரம்பத் தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அது உடைய வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் உறவினர்களும், நண்பர்களும் தொலைப்பேசியில் பயமுறத்தத் தொடங்கி விட்டார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஜன்மமா நாங்கள். என்னத் தான் நடக்கும் என்று பார்த்துவிடாலாம் என்ற முடிவுடன் அந்த மழைக்கு இதமாக இருக்கும் என்று சுடச்சுட வெங்காய பஜ்ஜி செய்து வழக்கம் போல் அதைப் படம் பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பி சும்மா இருந்தவர்களையும் உசுப்போத்தி விட்டோம். ஏதோ எங்களால் முடிந்த ஒன்று.

ஞாயிறு மழை மிக அதிகம். அந்த மழையில் நணைந்த படி, அப்போழுதே முட்டிக்கு மேல் வரத் தொடங்கிய மழை நீரில் நீந்திச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்த என் கணவரை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதிலும் கடமைத்தவராத வாட்ஸ்ஆப் குருப்பின் அட்மின் ஆன என் கணவர் வழியில் பார்த்த அனைத்தையும் படம் பிடித்து அனுப்பியது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயம் கடையில் இருந்து வீட்டிற்கு வர ஆட்டோ ஏறிய என் கணவர் ஆட்டோ டிரைவரிடம் 'இந்த பாதையில் சென்றால் குறுக்கு வழி, ஆனால் தண்ணீர் மிகமிக அதிகம். நாம் சுற்றியே போய் விடுவோம் என்று சொல்ல, அதற்கு அந்த டிரைவர் இல்ல சார் நாம இந்த வழியிலேயே போய் பார்க்கலாம் என்று அந்த வழியிலேயே ஆட்டோவில் நீந்திய படியே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார். ' அந்த பயணத்தின் போது ஆட்டோவிற்குள் தண்ணீர் புகுவதை வீடியோ எடுக்கத் தவற வில்லை என் கணவர். நாங்கள் எல்லாம் எப்படி!! நாங்கள் தான் இப்படி என்றால் எங்களுக்கு கிடைத்த ஆட்டோ டிரைவரும் இப்படி அமைந்தது நல்ல அனுபவம். வீட்டிற்க்குள் நுழைந்து இதைச் சொன்னவுடன் நான் கேட்ட முதல் கேள்வி என்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அந்த ஆட்டோ டிரைவர் நம்பர் வாங்கினீர்களா என்பது தான். எப்படி?

அன்று மழை நிற்கவே இல்லை. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வர ஆரம்பித்தது. காலி இடங்கள் எல்லாம் ஏரி, குளங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கின. நாங்களும் அதை படம் பிடித்து தற்போதைய நிலவரம் என்று எல்லோருக்கும் அனுப்பி எங்களை பயமுறுத்தியவர்களை எல்லாம் பயமுறத்த ஆரம்பித்தோம்.

குடையுடன் எல்லோரும் மொட்டை மாடிச் சென்று ஏரியல் வியுவ் என்று எங்கள் மெத்த ஏரியாவும் எப்படி தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்று பல கோணங்களில் படமாகவும், வீடியோவாகவும் அனுப்பி, அனுப்பி அன்றையப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்று பெரிய டிரம், குடம் என்று  மழை நீரை சேமிக்க ஆரம்பித்தோம். தண்ணீர் தொட்டியைக் கூடத் திறந்து வைத்து மழை நீரை சேமிக்கத் தொடங்கினோம்.


காலையில் இருந்து அனுப்பிய படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வர ஆரம்பித்தது. எல்லோருக்கும் நாங்கள் நல்லப் படியாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சொல்லியே நடு இரவு வந்து விட்டது. இன்றைக்கு பொழுதை ஓட்டிவிட்டோம் உறங்களாம் என்று செல்லவும் நம் நண்பர்கள் அதுதாங்க கொசுக்கள் எங்களை நலம் விசாரிக்கவும் சரியாக இருந்தது. மின் விசிறி வேறு இல்லை. பிரச்சனை நம்பர் 1 என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ஷடம் நம்பர் 2 என்றார் என் கணவர். நம்பர் 1 ஆட்டோ. நம்பர் 2 கொசு பிரச்சனைக்கு பேஸ்புக்கில் தீர்வு. தண்ணீரில் சுடம் போட்டு வைத்தால் கொசு வராது. முயற்சித்தோம். கொசுவும் ஏமாந்து விட்டது. நிம்மதியான உறக்கம் எங்களுக்கு. நமக்கு கூட இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டமா!!

மறுநாள் காலையிலும் மழை நின்றபாடில்லை. நான்கு சுவர்களோடு எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து ஒரு குளம் போல் தோற்றமளிக்கும் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் சுவர்கள் ஆங‍்காங்கே காணமல் போய் இருந்தன. ரொம்ப நாளாய் ஒரு ஓட்டைப் போட்டு தண்ணீரை எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாம் இந்த கொசுக்களால் தான். இன்று கடவுளே மழையை அனுப்பி எங்கள் குறையைத் தீர்த்துவிட்டார் ( அதிர்ஷடம் நம்பர் 3 ) . நேற்றைய அதிர்ஷடம் இன்றும் தொடர்கிறதே என்று மகிழ்ந்து குழாயைத் திறந்தால் வெறும் காற்றுத் தான் வருது. தண்ணீர் வரவில்லை ( பிரச்சனை நம்பர் 2) .

சேமித்து வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம். மழையோ நின்ற பாடில்லை. மின்சாரமும் வரும் அறிகுறியும் இல்லை. தண்ணீர் தான் அதிகமாகிக் கொண்டே போகிறதே. மழையும் நின்ற பாடில்லை. சின்னச் சின்ன குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் பயந்துப் போய் மூட்டை மூடிச்சைக் கட்டிக் கொண்டும் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோலில் சுமந்துக் கொண்டும் செல்லத் தொடங்கினார்கள். எப்படியாவது மெயின் ரோட்டிற்க்குச் சொன்று விட்டால் ஏதோனும் வாகனம் பிடித்துச் சொன்று விடாலாம் என்ற எண்ணத்திலேயே இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரில் நடக்கத் (மிதக்கத்) தொடங்கினார்கள்.

இப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும், சமையல் வேலையிலுமே காலைப் பொழுது போய் விட்டது. மதியம் நிறைய மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களிடம் விசாரித்தப் போதுதான் தெரிந்தது. எங்கள் ஏரியாவில் உள்ளவர்களை அழைத்துச் செல்ல படகும், லாரியும் வருகிறது என்று. முதலில் லாரி வந்து மக்களை ஏற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் வழக்கம் போல் படம் பிடிக்கத் தொடங்கினோம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் அல்லவா!!.


நேரம் ஆக ஆக குடித்தண்ணீரும், மேலே சேமித்து வைத்திருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியது.  ஒவ்வொருவருக்கும் பயமும் உண்டாகத் தொடங்கியது. தண்ணீரை நாம் எதிர்க் கொள்ளவது மிகக் கடினம். மழையும் நிற்கும் எண்ணத்தில் இல்லை. நாங்களும் அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை. மற்ற குடும்பங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிறைய பேர் கிளம்பிப் போனால் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஒரு நாள் சமாளிக்கலாம் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
எங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம் வெளியேறத் தாயார் ஆகியது. லாரியோ,படகோ வரக் காத்திருக்க தொடங்கினர். நாங்கள் எங்கள் அப்பார்ட்மென்டுக்குள் படகு வருமா, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று படம் பிடிக்க மெபைலுடன் காத்திருக்கத் தொடங்கினோம்.


நேரம் ஓட ஓட படகும் வரவில்லை. லாரியும் வரவில்லை. அதற்கு பதில் பால் பாக்கெட், பிஸ்கட், தண்ணீர் கேன் வேண்டுமா என்று கேட்டு வியாபாரிகள் அந்த மழையிலும். வெள்ளத்திலும் மிதந்தப் படி வந்தார்கள். சரியான வியாபாரம். அவர்கள் வாயில் அந்த நேரத்தில் வரும் விலை தான் அந்த பெருளின் விலை. ஒரு தண்ணீர் கேனை ரூபாய் 100 க்கு வாங்கினோம். என்ன செய்ய அந்த நேரத்தில் நமக்கு 100 ரூபாயை விட தண்ணீர் தானே முக்கியமாகத் தேன்றுகிறது. இந்த மழையிலும், இவ்வளவு தண்ணீரிலும் நமக்கு தேவையானதைக் கொண்டு வந்து கொடுக்கிறார்களே என்று தான் தோன்றுகிறது. எத்தனை இடத்தில் இது கூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு வெளியே எங்குப் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். தண்ணீர் மட்டும் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளேயோ குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லை. என்னக் கொடுமை சார் இது!!

ஒரு வழியாக நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தே விட்டது. ஆம்! படகு எங்கள் கார் பார்க்கிற்க்குள் வந்து விட்டது. படகு என்றால் இது சதாரண படகு இல்லை. இப்படி ஒன்றை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி என்னத்தான் சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

ஒரு பெரிய பலகை. நம் வீட்டின் முன்னால் இருக்குமே கதவு அது போன்ற பலகை. அதன் இரு பக்கங்களிலும் கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு டிரம்கள். உண்மையான படகை எதிர்ப்பார்த்த எங்களுக்கு இந்தப்படகு கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் ஏதோ ஒரு படகு எங்கள் வீட்டிற்க்குள்ளும் வந்து விட்டது என்ற பெருமை எங்களுக்கு. படம் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தோம்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். ஓடுவது மழை நீர் என்றால் பரவாயில்லை. கழிவு நீரும் அல்லவா கலந்துக் கொண்டு ஓடுகிறது.எப்படி இருந்திருக்கும்.  இதிலும் ஒரு நாய் என்ன அழகாய் நீந்திச் சென்றது. தெரியுமா?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். எப்படி இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைப் பரிதாபமாக மேலே பால்கனியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம். மாலை நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் போட வேண்டும் அல்லவா!!

இப்படியே மாலைப் பொழுது போய்க் கொண்டிருந்தது. இன்னும் நான்கு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. சிறிது நேரத்தில் மேல் வீட்டுற்கு அவர் உறவினர் வந்து கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள் என்றுக் கூறிக் கொண்டே விரைந்து யாருக்கோ போன் போட்டு ஒரு லாரிக்கு ஏற்பாடும் செய்தார். இன்னொரு குடும்பமும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள தயாரானது.

இப்பொழுது எங்கள் நிலமை தலைக் கீழானது. பால், தண்ணீர் என்று அதிக விலைக்கொடுத்து வாங்கி வைத்தோம் அல்லவா, இப்பொழுது என்னடாவென்றால் கிளம்பத் தயாராய் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பால், பழம், காய்கறி, தண்ணீர் அனைத்தையும் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்.(அதிர்ஷடம் நம்பர் - 4). இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று திகைத்து நின்ற நாங்கள் இப்பொழுது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு உறங்கச் சென்று விட்டோம்.

மறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. தண்ணீர் கொஞ்சம் குறையத் தொடங்குவதுப் போல் இருந்தது. மின்சாரம் இல்லை. தண்ணீர் வற்றினால் ஒழிய மின்சாரம் வரப்போவதில்லை. மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஆன்ட்ராய்டு மொபைல் எப்படி என்று நீங்கள் யோசிப்பது கேட்கிறது. மழை என்று சென்னவுடனே நாங்கள் செய்த நல்ல காரியம். மொபைலை, இரண்டு பவர் பாங்க், லாப்டாப் என்று எல்லாவற்றையும் முழுவதும் சார்ஜ் செய்து வைத்தது தான் எங்கள் சிறப்பம்சம். சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நாங்கள் இருந்து விடுவோம். ஆனால் மொபைல் வாட்ஸ் ஆப் இல்லாமல் சத்தியமாக முடியாது. நாங்களெல்லாம் எப்பவுமே இப்படித் தான்!!!!!

மின்சாரத் துறையில் இருந்து சிலர் கீழே ஏதேனும் மின்சார வயர்கள் கீழே கிடக்கிறதா என்று பார்த்தப்படியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மின்சாரம் எப்ப சார் வரும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஒன் அவர்ல வந்துரும் சார் என்று காதில் தேன் பாய்ச்சிச் சென்ற போது காலை மணி 11.00

பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற பழம், காய்கறி அனைத்தையும் மின்சாரம் இல்லாததால் பிரிஜ்க்குள் வைக்காமல் வெளியே மேஜை மீது வைத்திருந்தோம். இப்பொழுது பார்த்தால் நிறையக் கொசுக்கள். சிலப் பழங்கள் அதற்குள்ளாகவே அழுகத் தொடங்கியிருந்தன. இந்தக் கொசுக்களிடம் இருந்து இதை எப்படிக் காப்பது. மலேரியா, டொங்கு என்று பயமுறுத்தும் இந்த நாளில் நம்மை எப்படிக் காப்பது. (பிரச்சனை நம்பர் - 3)

பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது. மழையும் நின்று விட்டது. ஆந்திர நோக்கி நகர்ந்து விட்டது என்று ரமணன் அறிவித்தச் செய்தி தொலைப்பேசியின் வாயிலாக எங்களையும் எட்டிவிட்டது. கீழே தண்ணீர் கார் பார்க்கில் இருந்து சிறிது இறங்கியிருந்தது. ஆனாலும் எங்களால் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் போனால் தான் மின்சாரம். மழை பெய்தால் தான் மேழே தண்ணீரைப் பிடிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் தான் கீழே தண்ணீர் போகும். எப்படி விளையாடுகிறது விதி பார்த்தீர்களா?

என்ன செய்வது நாமும் ஏங்கேனும் போய் விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தும். எனக்கு இத்தனை நாட்கள் இருந்து விட்டோம் இப்பொழுது பின் வாங்குவதா வேண்டாம் என்று முடிவேடுத்து மீண்டும் நிலவரத்தை எல்லோருக்கும் பதிவு செய்தோம். இருவரின் மெபைவலிலும் சார்ஜ் குறையத் தொடங்கியது.

மதியத்திற்கு மேல் தண்ணீர் கார் பார்க்கிங்கிள் இருந்து முக்கால்வாசிக் குறைந்திருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்டில் நன்றாகக் குறைந்து அவர்கள் சம்ப்களையும் தரைத் தளத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். என் கணவரும் நாமும் நம் சம்பை சுத்தம் செய்யது விடலாம் என்று முடிவெடுத்து நாங்களும் மேல் வீட்டுக்காரரும் சேர்ந்து அதே ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். லாரியைத் தவிர எந்த ஒரு வாகனம் வரமுடியாத அளவுத் தண்ணீர் இன்னும் இருந்தது. ஒரு லாரி வந்தாலே தண்ணீர் உள்ளே வந்து விடுகிறது. இந்த நிலையில் இது சரியா தவறா என்றேத் தெரியவில்லை. சுத்தம் செய்து விட்டோம். லாரி அந்த வழியே வரக் கூடாது என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

இப்பொழுது கொசுக்கள் போய் விஷ ஜந்துக்கள் வரத் தொடங்கிவிட்டது.

சுத்தம் செய்து முடித்து ஒரு தண்ணீர் லாரியை அழைத்து தண்ணீர் ஊற்றவும் தொடங்கியிருந்தது எங்கள் எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட். இதற்கு மேல் இப்படியே உட்கார முடியாது என்று தண்ணீரில் இறங்கி விட்டனர் என் கணவரும், மேல் வீட்டுக் காரரும். அந்த அப்பார்ட்மெண்டில் பேசி அந்த லாரித் தண்ணீரிலேயே சிறிது தண்ணீர் வாங்கி டிரம்களிலும், குடங்களிலும் நிரப்பிக் கொண்டோம். அதற்குள் அங்கங்கே மின்விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த எதிர் வீட்டு அப்பார்ட்மெண்ட் வரை. இதற்குள் எங்கள் மெபைலை அந்த அப்பார்ட்மெண்ட்டில் கொடுத்து சார்ஜ் போடும் அளவுக்கு போய் விட்டார் என் கணவர். இன்றைய காலக் கட்டத்தில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவரிடமே பழகுவதில்லை நாம். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வரை என்றால் மிகப் பெரிய விஷயம் தானே! அதற்கு காரணம் இந்த மழை தானே. அதற்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

எங்கள் வீட்டிற்கு முன்னால் தான் தண்ணீர் அதிகம் என்பதால் எங்கள் லைனில் மட்டும் மின்சாரம் இ்ல்லை. தண்ணீர் போனால் தான் போல என்ற முடிவிற்கு நாங்கள் வந்த வேளையில் எங்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் மின்சாரம் வர எங்கள் முகங்களிலும் ஒளி பரவியது. உடனே மெபைலை வாங்கி வந்து எங்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டு விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மகிழ்ந்தோம்.

எல்லாம் நாங்கள் சரி செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் மழையில் கிளம்பிய அனைவரும் ஒவ்வொருவராக தொலைப்பேசியில் அழைத்து தண்ணீர் போய் விட்டதா? கரண்ட் வந்து விட்டதா? மழை இல்லையா? சம்பில் தண்ணீர் வந்து விட்டதா என்று பலக் கேள்விக்குப் பின் வரத் தொடங்கினார்கள் என்று சொல்லத் தான் வேண்டுமா??

இந்த அனுபவங்களை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு என்னத்தச் சொல்ல!!

19 November 2015

சென்னையில் ஒரு வெள்ளக் காலம்!

சென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள். 

மழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.

இந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை!) 

வருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.

மக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே!!

எல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.

நம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்!

அடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே. 

இந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.

07 October 2015

வைத்திரி

வைத்திரி (Vythiri). இது முழுவதும் காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வயாநாடு(Wayanad)  மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இங்கு நாம் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் நாம் தங்கும் இடம் (Resort) கூட மிகச் சிறப்பாக இயற்கையோடு கலந்து இருக்கிறது. நாங்கள் தங்கிய ரிசாட் உள்ளேயே ஒரு சிறிய அழகிய நீர் அருவி இருக்கிறது. சென்னையில் தண்ணீருக்கே பஞ்சம். இங்கே எங்கே பார்த்தாலும் தண்ணீரும், அடர்ந்து வளர்ந்த மரங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் ஒரு விதமான சந்தேஷத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. சென்னையில் ஒரு வாளி தண்ணிரில் குளித்துவிட்டு இரண்டாவது வாளி எடுக்கலாமா  என்று யோசிக்க வேண்டி இருக்கிறது நாம் வாங்கும் லாரி தண்ணிரால். காரணம் பணம் மட்டும் இல்லை, இரண்டாம் முறை குளித்தால் ஒரு முறைக்கே கொட்டும் மூடி முழுவதும் கொட்டி விடுமோ என்ற பயத்தாலும் தான். கோரளத்துப் பெண்களின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. இருக்காத பின்னே காடுகளில்  உள்ள முலிகைகளை எல்லாம் சேர்த்து வரும் சுத்தமான தண்ணீரில் குளித்தால் நன்றாகத் தானே இருக்கும்.  முடி கொட்டி விட்டது என்று சொல்ல முடியாமல் வெட்டிக் கொண்டவர்கள் பலர். என்னையும் சேர்த்து.

அருவிக்கு வருவோம். இந்த ரிச்சாட்டில் இருந்த அருவி எனக்கு நம் ஊர் குற்றால அருவியை நினைவுபடுத்தியது. அங்கே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இல்லை. முழுவதும் பாறைகள். நடுவே அருவி நீர். தொட்டாலே நடுங்க வைக்கும் குளிர். மறக்க முடியாத அனுபவம்.

வைத்திரியில் நிறைய அணைகள். குளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் என பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது நாம் சுற்றிப் பார்க்க. இங்கே இயற்கைக்கே முதலிடம்.


போகெடு ஏரி (Pookode Lake). இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுத்தமான இந்த அழகிய ஏரிக்கு நீர் காபினி ஆற்றில் (Kabani River) இருந்து வருகிறது. இங்கு நாம் படகில் சவாரி செய்யும் பொழுது நம் கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளும், அழகிய பறவைகளும் வர்ணிக்க முடியாத அருமையான காட்சிகள். இந்த ஏரி நாம் பார்ப்பதற்கு நம் இந்தியா நாட்டின் வரைப் படம் போல் இருப்பது ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை (Earth dam)யாகவும், ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை பனசுரா சாகர் அணை(BANASURA SAGAR DAM). மண் அணை என்பது மண், சல்லி. களிமண், பாறைகள் போன்றவற்றைக் கொண்டு அமைப்பது தான் மண் அணை. இந்த அணைக்கு நீர் காபினி நதியின் கிளை நதியான  காரமனதோடு(Karamanathodu ) நதியில் இருந்து வருகிறது. பனசுரா மலையைச் சுற்றி இது அமைப்பட்டு இருப்பதால் இதற்கு இந்த பெயர். படகில் செல்லும் போது நம்மைச் சுற்றி தண்ணீரும் அதைச் சுற்றி மலையும் கண்களுக்கு ஒரு பெரிய விருந்து நிச்சயம். மாலைப் பொழுது நெருங்கும் வேளையில் சாலையை மறைக்கும் மேக மூட்டங்களும், சிறு குழந்தை சினுங்குவதைப் போல் துறும் துறளையும் பார்க்கும் போது நாம் இன்னும் இளமையாகி விடுவோம்.

சோச்சிபாறா அருவி (Soochipara Falls). இது 656 அடி உயர மலையில் இருந்து விழுகிறது. சோச்சி என்றால் ஊசி என்றும் பாறா என்பது பாறையும் குறிக்கிறது. இந்த அருவி கடைசியாக சூழைக்கா ஆற்றில் (Chulika River) சென்று கலக்கிறது. போகும் வழி எல்லாம் பெரிய பெரிய பாறைகளாலேயே பாதை அமைத்திருக்கிறார்கள். மலை உச்சியை நாம் அடைய நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உச்சியை அடைந்தவர்கள் அருவியில் நனைவதை நிறுத்த நிச்சயம் மனம் இல்லாதவர்களாகவே இருப்பர் என்பது மட்டும் உண்மை.  நாங்கள் உச்சி வரை சொல்லா விட்டாலும் உச்சியில் இருப்பவர்களின் மனங்களை, குதுகழிப்பை கீழிருந்த படியே எங்களால் உணர முடிந்தது.

கல்போட்டாவில் இருந்து 25கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இடாக்கல் குகை (Edakkal Caves). இங்கே இரண்டு குகைகள் உள்ளன. ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டு. இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும், இந்த குகை சில குறிப்பிட்ட அளவு எடையையே தாங்கும் என்பதாலும் குகைக்குள் சொல்வோரின்  எண்ணிக்கை வரையருக்கப் பட்டுள்ளது.  குகைக்கு உள்ளே நம் முன்னோர்கள் வரைந்த மனிதர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள்,  சக்கரங்கள, அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள், எழுத்துக்கள், எண்கள் இன்னும் பல. நம்மை நம் முன்னோர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள்.  போகும் பாதை மிக மிகக் கடினமே. அடிவாரம் வரை செல்லத் தான் நமக்கு வாகன வசதி உண்டு. பின் நடராஜா சர்வீஸ் தான். கடின பாறைகளீல் ஏறியே செல்ல வேண்டும். முதல் பாதி பாதை நன்றாக இருப்பதால் நடப்பது சிரமமாக இருக்காது. அடுத்தப் பாதி மலை ஏறுவது மட்டுமே ஓரே வழி. நம் முன்னோர்கள் எல்லாம் எப்படித் தான் ஏறினார்களோ சத்தியமாகத் தெரியவில்லை. நாமும் நம் முன்னோர்களை வாழ்ந்த காலத்திற்ககுப் போக வேண்டும் என்றால் ஏறித் தான் ஆக வேண்டும். வரும் பாதை இரும்பு படிக்கட்டுகளால் அமைத்திருப்பதால் இறங்குவது கடினமாக இருக்காது. இங்கே சென்று வர கட்டாயம் ஒரு முழு நாள் தேவை.

வைத்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நான் மேலே சொன்னது மட்டுமல்லாமல் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. இங்கே உணவு எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.

இங்கு முக்கியத் தொழில் விவசாயம். தேயிலை, காபி, பாக்கு மற்றும் மிளகு இவையே இங்கு முக்கிய விவசாயம். தேயிலைத் தோட்டத்தை நான் மூனார்ரில் பார்த்திருக்கிறேன். காபியைப் பார்த்தது இங்க தான். ஜனவரி முதல் மார்ச் மிளகு அறுவடைக் காலம். அந்த சமயம் இங்கு வந்தால் மிளகைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போகலாம்.

நேரமும், விடுமுறையும், பணமும் இருந்தால் ஒரு வாரக் காலம் இயற்கையோடு இயற்கையாக இருந்து விட்டு வரலாம்.

26 December 2014

மூடு வாயை!


                லிங்கா படம் பார்க்க நான் என் மனைவியையும், என் மகள் அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் நல்ல கூட்டம்.

                இப்பொழுது தான் பேசத் தொடங்கியிருக்கும் என் மகள் வாய் ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தாள்.  நிற்கக் கூட இடம் இல்லாமல் அவளையும் தூக்கிக் கொண்ட நின்ற எனக்கு என் மகளின் மழலைப் பேச்சு பிடித்திருந்தாலும் கூட்ட நெரிசலில் அவள் பேச்சு என்னைக் கோபப்படுத்தி, என் மகளைப் பார்த்து, 'படம் பார்த்து வீடு திரும்பும் வரை வாயேத் திறக்கக் கூடாது. மூடு வாயை! திறந்தே அவ்வளவு தான் ' என்றேன் சற்று கோபமாக. சிறிது தூரம் சென்றதும் ஏதோ சொல்ல வந்த என் மகளை என் கோபப் பார்வைத் தடுத்து நிறுத்தியது.

                இரண்டு நிறுத்தம் சென்றதும் அமர இடம் கிடைத்தது. அப்பொழுது தான் கவனித்தேன் என் மகள் அணிந்திருந்த அரை சவரன்  மேதிரத்தைக் காணவில்லை என்று. பஸ்ஸில் கீழே விழுந்து விட்டதோ என்று தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை.

                என் மகளிடம் மோதிரம் எங்கே? என்று கேட்க அவள் வாயைத் திறக்கவில்லை. வாயைத் திறந்து சொல்லு என்று நான் அதட்ட, 'நீங்க தானே வாயைத் திறந்தா அடிப்பேன்னு சென்னீங்க. அந்த அங்கிள் என் மேதிரத்தை எடுத்துட்டுப் போயிட்டாரு' ன்னு மழலையில் சொன்ன என் மகளைப் பார்த்து  வாய் மூடி நின்றேன்.


                லிங்காவால் 40 கோடி நஷ்டம் என்பது உண்மையோ இல்லையோ எனக்கு (என் வார்த்தையால்) அரை சவரன் நஷ்டம் உண்மைங்க!!

24 December 2014

போ டாடி போ....

           
      அலுவலகம் முடிந்து வந்ததும்  வராததுமாக என் மனைவி எங்கள் மூன்று வயது மகள் அவந்திகாவைப் பற்றி தன் புலம்பலைத் தொடங்கிவிட்டாள்.

இங்க பாரும்மா! அவ குழந்தை. அப்படித்தான் இருப்ப. நாமத் தான் மெதுவாகச் சொல்லி புரிய வைக்கணும்மன்னு சொன்னேன். அதற்கு என் மனைவி, அவளுக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சுங்க. மூணு வயசுப் பெண்ணு மாதிரியா பேசுறா? என்னால் முடியாது, முடிந்தால் இன்னக்கி நீங்க அவளுக்கு கதை சொல்லி தூங்கவையுங்க பார்ப்போம்ன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டா...

டிவியில் மூழ்கி இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கைக்குப் போய் கதைச் சொல்லத் தொடங்கினேன். 'ஒரு ஊருல ஒரு பாட்டி..' என்று தொடங்கிய உடனே போர் டாடி எனச் சொன்னாள் என் மகள். சரி என்று 'ஒரு ஊருல ஒரு காக்கா..' என்று தொடங்கிய உடனே மறுபடியும் போர் டாடி எனச் சொன்னாள். சரி என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்துக்கும் போர் போர் என்று சொன்ன என் மகள், 'போ டாடி போ' இது எல்லாம் பழசுக் கண்ணா பழசு. சுட்டி டிவி, பேபி டிவி பாரு எல்லாக் கதையும் புதுசுக் கண்ணா புதுசு என்று சொன்ன என் மகள் அவந்திகாவையும், என் மனைவியின் புலம்பலையும் நினைத்து திகைத்து நின்றேன்.


16 April 2012

SMS SHORTCUTS

1dRfl - wonderful
2 - to/too/two
2dA - today
2moro - tomorrow
2nite -
tonite
3dom - freedom
4 - for
4get - forget
4N - foreign
ADN - any day now
AFAIK - as far as I know
AFAIR - as far as I recall
ASAP - as soon as possible
ATM - at the moment
B - be
B4 - before
B4N - bye for now
BB - bye-bye
Bf -boyfriend
BG - big grin
BION - believe it or not
BK - big kiss
BTDT - been there, done that
BTW - by the way
By - busy
C - see/sea
CB - call back
CUL - see you later
CWYL - chat with you later
DUZ - does
DUZNT - doesn't
F2F - free to talk?
G2G - got to go
Gf
- girlfried
Gr8 - great
Grr
- angry
H2 - how to
HUH - have you heard?
IC - I see
ICCL - I couldn't care less
IK - I know
in4ml - informal
KISS - keep it simple, stupid
KUTGW - keep up the good work
@ "At"

MSG "Message"

W "With"

ATB "All the best"

NE "Any"

W/O "Without"

B "Be, Bee"

NETHNG "Anything"

WKND "Weekend"

BCNU "I'll be seeing you"

NE1 "Anyone"

XLNT "Excellent"

BWD "Backward"

NO1 "No-one"

B4 "Before"
OIC "Oh, I see"

YR "Your"

C "See, Sea"

PCM "Please call me"
1 "One, Won"

CU "See you"

PLS "Please"

2 "Too, To, Two"

DOIN "Doing"

PPL "People"

:) Original
smiley
:-) Classic
smiley
;-)
Wink
:-)) Very happy
|-)
Hee-hee
:-D Laugh loud
:-o Amazement
:^D" Great! I like it!
:-s Confusion
{} No comment
:-C Totally unbelievable
%-) Confused
*:* Fuzzy face
:-@ Screaming
:-7 Wry remark
:-( Frown
:>
Develish grin
(:-|K- Dressed to kill
:-|| Angry
::=)) Seeing double

:-> Hey
|:-0 No explanation
#:-) Hair in a mess
>;-(' I am spitting mad
#-) Partied all
night
:-| Hmmm
:-& Tongue-tied
L8 - late
L8r - later
LMK - let me know
M8 - mate
MOF - matter of fact
MT - empty
MTE - my thoughts exactly
NAGI - not a good idea
Ne - any
Ne1 - anyone
No1 - no one
nrg
- energy
OIC - Oh I see
OK - okay
ONNA - oh no, not again!
OTT- over the top
PCM - please call me
Pls
- please
Ppl
- people
PTL - praise the Lord
R - are
Re - regarding
RUOK - are you okay?
Spk
- speak
Sry
- sorry
THX - thanks
TTYL - talk to you later
TXT - text
U - you
U@ - you at? (where
are you?)
UOK - you okay?
UR - your/you're
Usu
- usually
W8 - wait
W84M - wait for me
W/ - with
Wan2 - want to
wn
- when
WMF - works for me
XLNT - excellent
Y - why
YM - you mean
YR - yeah, right
GONNA "Going to"

SUM1 "Someone"

3SUM "Threesome"

GR8 "Great"

STRA "Stray"

4 "For, Four"

H8 "Hate"

THNQ "Thank you"
:-) "I'm happy"

L8 "Late"

THX "Thanks"
:-o "I'm surprised"

L8R "Later"

U "You"
:-( "Sad face"

LUV "Love"

UR "You are "
d:) "Baseball
cap "
MOB "Mobile"

WAN2 "Want to?"
;-/ "Confused"

2DAY "Today"

F2T "Free to talk"
RUOK "Are you okay?"

2MORO "Tomorrow"

FWD "Forward"

RGDS "Regards"

30 March 2012

வாங்கிக் கட்டிக் கொண்டேன்!!

சென்னையில் பஸ்லில் அலுவலகம் போவது என்பதே பெரிய வித்தைத் தான். கூட்ட நெரிசலில் - காலை எங்கே வைப்பது, கையை எங்கே பிடிப்பது, கைப்பையை எங்கே வைப்பது, சாப்பாட்டுப் பை எங்கே மாட்டிக் கொண்டதோ, இது தான் வாய்ப்பு என்று இடிக்கும் இடி மன்னர்கள் தொல்லை, டிக்கெட் வாங்க முடியாமல் தவிப்பது என பல கஷ்டத்தில் பெருங்குடியில் இருந்த போது என் பஸ் பயணம் இருந்ததுஇப்போது வீடு வேளச்சேரியில். பஸ் பயணம் இல்லை. இரயில் பயணம் தான். மகளிருக்கான தனி பெட்டியில் செல்வதால் பெரிய பிரச்சனை இல்லை. நிறைய பெட்டி இருப்பதால் கூட்டம் இருந்தாலும் பஸ் போன்ற நெரிசல் இல்லை.சீசன் டிக்கெட் மாதம்தொரும் வாங்கிவிடுவதால் டிக்கெட் வாங்கும் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.

இன்றும் இப்படித் தான். காலையில் சீக்கிரமே இரயில் நிலையம் சென்று விட்டேன். அப்பொழுது தான் ஒரு இரயில் வந்து சென்றதால் எங்கும் கூட்டம் இல்லை. என் சீசன் டிக்கெட் வேறு முடியும் நிலையில் இருந்தது. டிக்கெட் கவுண்டரிலும் கூட்டம் அதிகம் இல்லை. மூன்றுப் பேர் தான் வரிசையில் நின்றிருந்தார்கள். டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்து,நான்காவதாகப் போய் நின்றேன். முதலில் நின்றவர் வேகமாக டிக்கெட் வாங்கி விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாவது நபரோ அங்கே இருந்து இங்கே, இங்கே இருந்து அங்கே என்று நிறைய டிக்கெட் வாங்குகிறேன் என்று குறைந்த பட்சம் நான்கு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டுவிட்டார். மூன்றாவது நபர்இரண்டு நிமிடம் மட்டும் எடுத்துக் கொண்டார். அடுத்து என் முறை.

நான் கவுண்டர் அருகில் சென்று என் பழைய சீசன் டிக்கெட்டை எடுத்து நீட்டி ஏப்ரல் ஒண்ணாம் தேதியில் இருந்து ஒரு மாதம் ரிணிவல் செய்ய வேண்டும் என்றேன். அவரும் சரி என்று வாங்கிக் கொண்டார். கையில் வைத்து கண்களுக்குஅருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்த்தார். பார்த்த அவருக்கு வயது அநேகமாக ஓய்வு பெறும் வயதுக்கு அருகில் இருக்கும். அதனால் பார்ப்பதற்கு சிரமப்படுகிறாரே என்று நினைத்து 'நிவேதிதா' என்று என் பெயரைச் சென்னேன். கேட்டதும் என்னை ஒரு முறைபார்த்துவிட்டு மறுபடியும் முன்னர் சென்னபடியே கண்களுக்கு அருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தார். பின்னால் பார்த்தால் இத்தனை நேரம் இல்லாத நீண்ட வரிசை. இப்போது அவர்பெயரைப் படித்துவிட்டார் போலும், தட்டச்சு செய்ய ஆரம்பித்திருந்தார். என்னுடைய பெயரில் உள்ள பத்து எழுத்துக்களையும் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சில் தேடியும், நான் கொடுத்த டிக்கட்டைப் பார்த்தும் அடித்துக்கொண்டிருந்தார். பின்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்து நான் அவருக்கு உதவ நினைத்து ஒவ்வொரு எழுத்தாக சொன்னால் மனிதர் இந்த முறை என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு வழியாக அடித்தப்பின்னும் சரியாக வரவில்லை போலும் மறுபடியும் முயற்ச்சித்தார். மறுபடியும் தோல்வி தான். இப்படியே நான்கு, ஐந்து நிமிடங்கள் சென்றன. நிமிடங்கள் தான் சென்றதே ஒழிய அவரால் என் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது கூட்டம் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது தான் சீசன் டிக்கெட் வாங்க வேண்டுமா? நல்ல நேரம் பார்த்து வர்ங்கப்பா!! என்று என்னை வசைப்பாட ஆரம்பித்தது. அந்த பெரிய மனிதரோ அவருக்கே உரிய குணமான பெறுமை குணத்துடன் மிகப் பொறுமையாகத் தேடிக் கொண்டேயிருந்தார். உச்சக் கட்டமாக அடுத்த இரயிலும் வந்து விட்டது. வரிசையில் இருந்த அனைவரும் என்னையும் சேர்த்து டென்ஷன் ஆகிவிட்டோம். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து என் சீசன் டிக்கெட்டைத் திரும்ப பெற்றுவிடலாமா என்று யோசித்த வேளையில் அந்த மனிதர் அடுத்தக் கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் கேட்டு பின் சில பல பட்டன்களை தட்டச்சில் தட்டி ஒரு வழியாக எனக்கு சீசன் டிக்கெட் கொடுத்துவிட்டார்.

நானும் வாங்கிக் கொண்டு தயாரக நின்றிருந்த இரயிலில் ஏறிய பின் யேசிக்கிறேன். கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்தது ஒரு குற்றமா? என்னால் இத்தனைப் பேருக்கு டென்ஷன். இந்த டென்ஷன், கோபம் எல்லாம் என்னால் மட்டுமா? காலை நேர பரபரப்பில் வேகமாக வேலை செய்யாத அந்த அதிகாரியின் குற்றமா? சீசன் டிக்கெட் வாங்குவதற்கு என்று தனிக் கவுண்டர் வைக்காத இரயில்வே நிர்வாகத்தின் குற்றமா?

பஸ்ஸில் பலர் சீசன் டிக்கெட் வாங்குவதில்லை. ஆனால் இரயிலில் வரும் நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதம் பேர் சீசன் டிக்கெட் எடுக்கிறார்கள். எல்லா நாட்களில் முடியாவிட்டாலும் மாதத்தின் கடைசி வாரம் முதல் மாதத்தின் முதல் வாரம் வரை ஒரு தனி கவுண்டர் திறந்தால் என் போன்ற பலரும் பயணடைவார்கள். இரயில்வே நிற்வாகம் கவனிக்குமா??

29 March 2012

முக்கியமான பத்து விஷயங்கள்!

1 சிந்தனை :
அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். பகை அழிவில்
கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம்
செலுத்தலாம். இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை. -
காந்திஜி

2 புத்திமதி:

1. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு
கெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை. 2. பிறர்
குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே
கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்

3 கடமைகள்:
1. பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்
2. துஷ்டனை நல்லவனாக்குதல்
3. படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்

4 குறைகள்:

1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2. வீட்டின் குறை பழுது பாராமை
3. அழகின் குறை சிரத்தை இன்மை
4. காவலாளியின் குறை கவனக்குறைவு

5 போதுமே:

1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ்
போதுமானவன்.
2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு
அல்குர்ஆன் போதுமானது.
3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ,
அவருக்கு மரணம் போதுமானதாகும்.
4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ,
அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.
5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை
பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்


6 மனமே ஆறு:
1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.
2. பயப்படாதே, நான்
உனக்கு துணை நிற்கிறேன், என்பது இயேசு நமக்கு அளிக்கும் ஆறுதல் வார்த்தை.
3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார்
தாவீது ராஜா.
4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன்,
மனுஷன் எனக்கு என்ன செய்வான்.
5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம்
தவிர்க்கப்பட வேண்டியது.
6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை
உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இந்த 6மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.

7 நன்முத்து:

1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில்
எடுத்து விடு
6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.

8 உன் சொத்து:
1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு பெரியவர்களுடன் சேர்ந்திரு
8. பொய்யை மெய்யாக்காதே!

9 கட்டுப்பாடுகள்:
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை
கடைபிடி

10 அறிவுரை:
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.

09 March 2012

Have a good day !!
“Do not think you are nothing and do not think you are everything
but think you are something, one who can achieve anything.”
A group of frogs were traveling through the woods, and two of them fell into a deep pit. When the other frogs saw how deep the pit was, they told the two frogs that they were as good as dead.
The two frogs ignored the comments and tried to jump up out of the pit with all their might. The other frogs kept telling them to stop, that they were as good as dead. Finally, one of the frogs took heed to what the other frogs were saying and gave up. He fell down and died.
The other frog continued to jump as hard as he could. Once again, the crowd of frogs yelled at him to stop the pain and just die. He jumped even harder and finally made it out. When he got out, the other frogs said, "Did you not hear us?"
The frog explained to them that he was deaf. He thought they were encouraging him the entire time.
This story teaches two lessons:
1. There is power of life and death in the tongue. An encouraging word to someone who is down can lift them up and help them make it through the day.
2. A destructive word to someone who is down can be what it takes to kill them.

Be careful of what you say. Speak life to those who cross your path. The power of words... It is sometimes hard to understand that an encouraging word can go such a long way. Anyone can speak words that tend to rob another of the spirit to continue in difficult times. Special is the individual who will take the time to encourage another.

14 December 2011

இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாள்!!

இன்று அலுவலகத்தில் யாருக்கும் வேலை இல்லை.
ஆமாம் இண்டர்நெட் தான் வேலை செய்யவில்லையே.
எதுவாக இருந்தாலும் கூகுள் தாத்தாவிடம் கேட்கமால் ஒரு எழுத்துக் கூட அடிக்க மாட்டோம். அவ்வளவு மாரியாதை என்று நினைக்க வேண்டாம். பல போருக்குக் கூகுள் இல்லாமல் வேலைப் பார்க்கத் தெரியாது என்பது தான் உண்மை.

பலருக்கு காலை வந்தவுடன் முதல் வேலையே ஜிமெயில், யாகூ, போஸ் புக் பார்ப்பது தான். வேலை எல்லாம் அப்புறம் தான்.

என்ன பிரச்சனை என்று மண்டையை பிய்த்துக் கொண்டே பரபரப்பாய் இயங்கும் அட்மின்ங்கள் ஒருபுறம். யார் யார் ஆன்லைனில் தகவல் (நண்பர்கள் கூட்டம் கிளையன்ட் கூட்டம் அல்ல) அனுப்பியிருப்பார்களோ என்ற தவிப்பில் சிலர். வேலைத் தான் இல்லையே இன்றய பொழுதை சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகக் கழிப்போம் என்ற கூட்டம் ஒரு புறம், இப்படியே போனால் வேலையை எப்படி முடிப்பது என்ற கவலையில் மேலதிகாரிகள் ஒருபுறம். என்ன செய்வது என்றே தெரியாமல் என்னைப் போல் எதையோ கிறுக்கும் கூட்டம் ஒருபுறம்.

இன்றய பொழுது இப்படியே போய் விடுமோ?? காலை 9.30க்குத் தொடங்கி இப்போது மணி மாலை 4.00 . இன்னும் சரி செய்த பாடில்லை. சிறிது நேரம் வருகிறது. பின் இணைப்பு போய் விடுகிறது.

இப்பொழுது வீட்டிற்க்கு அனுப்பினால் நன்றாகத் தான் இருக்கும். ஒரு வேளை இப்பொழுது போகச் சொல்லிவிட்டு சனிக்கிழமை வரச் சொல்லிவிடுவார்களோ?? ஐயோ வேண்டவே வேண்டாம். இன்னும் 2 1/2 மணி நேரம் தானே இப்படியே ஓட்டிவிடுலாம்.

என்ன நான் சொல்வது சரி தானே??

இண்டர்நெட் இல்லாமல் இந்த பதிவை பதியக் கூட முடியவில்லை. இண்டர்நெட் இல்லாமல் உலகமே இருண்ட மாதிரி இருக்கிறது. என்ன செய்வது?? (!!!)

ஒரு விஷயம் இந்த இண்டர்நெட் இல்லாததால் தான் இன்று என்னால் ஓரு பதிவு எழுத முடிந்தது. எல்லம் நன்மைக்கே..

12 December 2011

திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ!!

காலையில் எழுக் கூட முடியவில்லை. அலுவலகம் வந்தும் கண்ணைச் சுழற்றுகிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றால் எப்படி? அதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் என் போன்றவர்களுக்கு போதவே போதாது..

திங்கட்கிழமை மட்டும் தான் இந்த உறக்கம். இதுவே ஞாயிறு என்றால்,விடிகாலையிலேயே முழிப்பு வந்து விடுகிறது. எனக்குத் தான் இப்படியா இல்லை நம்மைப் போல் பலருக்கும் இப்படித் தானா என்று தெரியவில்லை.

ஞாயிறு காலையிலேயே எழுந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தசாரதிக்கு மட்டும் அல்லாமல் எல்லா மூலவர்க்கும் எண்ணைக்காப்பு நடக்கிறது என்று திரைப் போட்டு இருந்தார்கள். வைகுண்ட ஏகதேசிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் திரையை எடுப்பார்களாம். அந்த மீசைக்காரனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அங்கு இருக்கும் பிரசாதக் கடையில் வடை, புளியோதரை வாங்கி உண்ண ஆரம்பித்தேன்.என் கணவரோ, இவள் கோவிலுக்கு வருவதே இதை உண்ணத்தான்
என்றுக் கூறிக்கொண்டு இருந்தார். பொது வாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள்
சகஜம் என்பதால் காதில் வாங்காமல் என் கடமையில் அது தான் உண்பதில் கருத்தாய் இருந்து உண்டு முடித்து வீடு திரும்பினோம்.

சமைத்து உண்ட பின் சிறிது உறங்கி எழுந்தால் மணி 4. வீட்டிலிருந்தால் இருவருக்குள்ளும் எப்பொழுதும் குஸ்தி தான் என்பதால் இருவரும் ஒரு மனதாய் ஓஸ்திக்கு போக முடிவு செய்திருந்தோம்.

படம் என்னடாவென்றால் இந்த ஓஸ்திக்கு எங்கள் குஸ்தியே மேல் என்பது போல் இருந்தது. தலைவழி வந்தது தான் மிச்சம். வீடு திரும்பி சாப்பிட்டு படுக்கலாம் என்றால் விஜய் டிவியில் நீயா? நானா?வில் ரஜினிதான் அன்றைய தினத் தலைப்பு. எப்படி விடுவது.

ரஜினியா?,தலைவலியா? தூக்கமா? என்ற போட்டியில் வென்றது தூக்கம் தான்.

இதைக் கஷ்ட்டப்பட்டு படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருகிறது என்றால் எனக்கு மட்டும் வராதா என்ன??

காலையில் எழுந்ததிலிருந்து தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே என்ற என் கணவருக்காவே இந்த பதிவு.

என் தூக்கத்திற்கான காரணம் சரிதானே? நீங்களே நியாயத்தை சொல்லுங்கள்!!

09 December 2011

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

நம் குழந்தை பருவத்தில் பகிர்ந்து உண்பதற்கு காக்காகையைத் தான் உதாரணமாக காட்டுவார்கள்.

எங்கு உணவைக் கண்டாலும் தான் மட்டும் உண்ணாமல் மற்ற காக்காகளையும் அழைத்து பகிர்ந்து உண்ணும்

அதனால் தான் பகிர்தலுக்கு காகத்தை சொல்வார்கள்.

சிறு வயதிலிருந்தே காகத்திற்கு உணவுக் கொடுக்கும் வழக்கத்தையும் உண்டாக்கினார்கள்

காலம் மாற மாற மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்றால்
மனிதன் வைத்த உணவை உண்ட காகங்களும் மாறிவிட்டன!!

ஆமாம்!

இன்றும் காகங்கள் உணவைக் கண்ட உடன் மற்ற காகங்களை அழைக்கின்றன.
உணவைப் பகிர்ந்து கொள்ள அல்ல

சின்னக் குழந்தைகள் இனிப்புக்களை மற்ற குழந்தைகளிடம் காட்டிவிட்டு சாப்பிடுவார்களே அப்படித் தான் இன்றைய காக்காய்களும்நைநை காட்டிவிட்டு முடிந்த வரை அலகால் கொத்திக் கொண்டு சொல்கின்றன!!

குரல் கேட்டு ஆசையாய் பறந்து வந்த காகங்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!!

இது ஒரு புறமிருக்க,

இன்றய நவின காக்காய்கள் சிறு குழந்தைகளைப் போல அடம் பிடிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன.

ஆமாம்!!

தினமும் அதற்கு சப்பாத்தி, பூரி என்று விதவிதமாக வேண்டுமாம்
சப்பாத்தி வைக்கும் இடத்தில் சாதம் வைத்துப் பாருங்கள்
மறுநாள் காலை நமக்குத் தான் வேலை இருக்கும்.
ஆமாம் சாதம் வைத்த இடத்தில் அப்படியே இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும்

இதுவே சப்பாத்தி. பூரி என்று வைத்துப் பாருங்கள். ஒன்று விடமால் சாப்பிட்டு இடத்தையும் சுத்தப் படித்தியிருக்கும்

சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கும் இதே நிலை தான்!!

சாதம் சாப்பிடும் போது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூட சில நேரங்களில் சிந்திவிடுகிறோம், காக்காய் சிந்துவதை பெரிதாக சொல்கிறாயே என்று கேட்க வேண்டாம்

நான் சிந்துகிறது என்று எழுத வரவில்லை
தீண்டுவதே இல்லை என்று தான் சொல்கிறேன்....

மனிதன் காக்கா பிடிக்கிறான் என்றால்,
காக்கவொ மனிதனைப் படிக்கிறது

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

01 December 2011

பதிவு ஆரம்பம்... இது தொடருமா??

காலம் பல கடந்து விட்டது.
என் பதிவு பதிவாகி.
வேலை வேலை
அவ்வை சண்மூகி வாழ்கையாகி விட்டது
வீட்டிலும் வேலை
ஆபிஸ்லும் வேலை
எங்கு போய் பதிவது.

இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி என்று
இன்று ஆரம்பித்து விட்டேன்.

தமிழ் தட்டச்சு மறந்தே போய் விட்டது.
தட்டுத் தடுமாறி அடிக்க ஆரம்பித்தவுடன்
அழைப்பு வந்து விட்டது என் கணவரிடம் இருந்து.

விடை பெறுகிறேன்
பார்க்கலாம் என் பதிவு தெடருமா என்று!!!

15 December 2009

மீண்டும் வருகிறேன்!!

மீண்டும் வருகிறேன்!!

ரொம்ப நாட்கள் ஆகி விட்டது ப்ளாக் எழுதி.
இப்பொழுது மீண்டும் வருகிறேன் ப்ளாக் எழுத..

கடந்த ஒரு வருடத்தில் நிறைய நடந்து விட்டது.

திருமணம் முடிந்து என் கணவருக்கு வேலை மதுரைக்கு மாற்றலாகி விட்டதால்
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு மதுரை வந்து இங்கே திரும்பவும் வேலை தேடும் படலத்தைத் தொடங்கி ஒரு கம்பெனியில் வேலையும் வாங்கி நேரம் ஒத்து வராத காரணத்தால் அந்த வேலையும் விட்டு இன்று வீட்டில் சும்மா இருக்கிறேன்.

என்ன செய்ய எனக்கும் என் கணவருக்கும் வெவ்வேறு பணி நேரம்.எனக்கு 10 மணி தொடங்கி மாலை 7 மணிக்கு முடியும் என்றால்
என் அவர்க்கு மதியம் 1 தொடங்கி இரவு 10.30 அல்லது 11 மணி வரை வேலை.
சந்திக்கும் வேளை குறையும் பட்சத்தில் கருத்து வேறு பாடும், பிரச்சணைகளும் வரத்தானே செய்யும்.அதனால் தான் இன்று வேலையை விட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன்.

வேலைக்குப் போகாத திருமணம் ஆன பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதாக கூற கூடாது.

எத்தனை வேலைகள்!!

சமைப்பது, மாவாட்டுவது, துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் போட்டு துவைத்த பின் காய வைத்து மடித்து எடுத்து வைப்பது!!,பணிப் பெண் வீடு கூட்டி, பாத்திரம் கழுவுவதை மேற் பார்வையிடுவது!!

இப்படி நிறைய வேலைகள்.

வேலைக்கு போகும் திருமணம் ஆன பெண்களும் இந்த வேலைகளை எல்லாம் செய்யாமல் இல்லை.
மேலே சொன்ன அத்தனை வேலையையும் பார்க்க திட்டம் திட்டி வீட்டு வேலையோடு அலுவலக வேலையையும் செய்யத் தான் செய்யகிறார்கள்.

இதில் நான் இரண்டாம் ரகம்

வீட்டு வேலையோடு அலுவலக பரபரப்புமாக இருந்த எனக்கு
இன்று எப்படி பொழுதைக் கழிப்பது என்றே தெரியவில்லை.

பெண்கள் வேலைக்கு போவது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல
வேலைக்கு போவதால் ஒரு வித தைரியம் கிடைக்கிறது.
மற்றவர்களுக்கு நம்மாலும் உதவ முடியும் என்ற எண்ணம் உண்டாவதால்
வேலைக்கு போகும் பெண்ணிற்கு ஒரு கம்பீரம் உண்டாகிறது.

ஆனால் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்ணிற்கோ தேவையே இல்லாத எண்ணங்கள்..

அதனால் தான் மீண்டும் எழுதலாம் என்று தொடங்கியிருக்கிறேன்.
நிறைய புத்தகம் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

இந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது என் கணவருக்கு.

கணிணியும் இல்லாத நிலையில் திரும்பவும் நான் எழுதுவது தடைப் பட்டுப் போக நிறைய வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கை என்னும் சக்கரம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது.
அந்த சக்கரத்தில் மாட்டிக் கொண்டு நானும் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

பார்க்கலாம் என்ன நடக்கிறதேன்று....

மீண்டும் சென்னைக்கு வரும் எங்களுக்கு தங்க வீடு வேண்டும் அல்லவா?
அதைத் தேடி அலைந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

2010ல் சென்னைவாசி நான்!!
மீண்டும் வருகிறேன்!!

08 March 2009

satisfaction and efficiency

A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage." The gentleman examined the idol and found no apparent damage. "Where is the damage?" he asked. "There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work. "Where are you going to install the idol?"



The sculptor replied that it would be installed on a pillar twenty feet high. "If the idol is that far, who is going to know that there is a scratch on the nose?" the gentleman asked. The sculptor stopped his work, looked up at the gentleman, smiled and said, "I will know it."



The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not. "Excellence" is a drive from inside, not outside. Excellence is not for someone else to notice but for your own satisfaction and efficiency...


படித்ததில் ரசித்தது!!

31 December 2008

நடக்கட்டும் நடக்கட்டும்!!

புத்தாண்டு பிறக்கப் போகிறது
இனி நடப்பது எல்லாம் நல்லப் படியாக நடக்கட்டும்

உண்ண உணவின்றி தவிப்போர்க்கு நல்ல உணவு கிடைக்கட்டும்
இருக்க இடமின்றி தவிப்போர்க்கு நல்ல இருப்பிடம் கிடைக்கட்டும்
வேலையின்றி தவிப்போர்க்கு நல்ல வேலைக் கிடைக்கட்டும்
வேலையில் இருந்தும் வேலையில்லாமல் தவிப்போர்க்கும் நல்ல வேலைக் கிடைக்கட்டும்

நாட்டில் விலைவாசி குறையட்டும்
இல்லோர் இல்லாமலே போகட்டும்
நல்லோர் நலமுடன் வாழட்டும்
நாட்டில் கல்வியாளர் பெருக்கட்டும்

கன்னியருக்கு மணவாழ்க்கை அமையட்டும்
மணமானோருக்கு மகப்பேரு கிட்டட்டும்
குழந்தைகளுக்கு பள்ளியில் அனுமதி கிடைக்கட்டும்
வீட்டில் என்றும் அமைதி நிலவட்டும்

நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!